“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது…

“ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நலவாக அமைந்து விடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாய் அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நலவாய் அமைகிறது.”

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் விவகாரம் மற்றும் நிலைமைகள் குறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஏனென்றால் அவனுடைய எல்லா சூழ்நிலைகளும் நன்மையாகவே உள்ளன. அதே வேளை விசுவாசிகளைத் (முஃமினைத்) தவிர வேறு யாருக்கும் இது கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்சியான – மங்கலகரமான ஒரு விடயம் நிகழ்ந்தால் அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஆகவே அவன் நன்றி செலுத்தியமைக்கான கூலியை அவன் அடைந்து கொள்கிறான் -பெற்றுக் கொள்கிறான். அவனுக்கு தீங்கான –துன்பகரமான – விடயம் ஏற்பட்டால் அவன் அதற்காக பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கிறான். இந்த வகையில் அவனும் தனது பொறுமைக்காக கூலியை பெற்றுக்கொள்வதோடு, ஏற்பட்ட துன்பம் நீங்கும் வரையில் அவன் கடந்து போகும் சகல நிலைகளிலும் அவனுக்கு கூலி கிடைக்கிறது.

فوائد الحديث

மகிழ்வான தருனங்களில் நன்றி செலுத்துதல் மற்றும் துயரமான தருனங்களில் பொறுமையாக இருத்தலின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். இவ்வாறு யார் நடந்து கொள்கிறாரோ அவர் ஈருலக நன்மையையும் பெற்றுக்கொண்டார் . யார் அருள்களுக்கு நன்றி செலுத்தாது ஏற்பட்ட துன்பத்தை பொறுத்துக்கொள்ளாது இருக்கிறாரோ அவர் கூலியை இழந்து பாவத்திற்கு தகுதியானவராகி விடுகிறார்.

ஈமானின் சிறப்பு அதாவது எந்த சூழ்நிலைகளிலும் வெகுமதியை ஈமான் கொண்டோருக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.

மகிழ்ச்சியான தருனங்களில் நன்றி செலுத்துவதும் துன்பங்களின் போது பொறுமை காப்பதும் முஃமின்களின் வழிமுறையாகும். (பண்புகளின் ஒன்றாகும்.)

விதியின் மீதான நம்பிக்கை மனிதனை எல்லாச் சூழ்நிலைகளிலும் பரிபூரண திருப்தியின் பாதையில் வைக்கிறது. அதேசமயம் நம்பாதவரின் நிலை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நஷ்டம் ஏற்பட்டால் கோபம் கொள்கிறான், பாக்கியம் கிடைத்தால் போதையில் மயங்கி அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விலகி கீழ்படியாத செயல்களில் செலவழிக்கத் தொடங்குகிறான்.

التصنيفات

உளப்பரிசுத்தம் செய்தல்