நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை…

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

முஃமின்களைத் தவிர வேறு எவறும் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அதே போல் பரஸ்பரம் நேசம் கொள்ளாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறவோ, ஈமான் பரிபூரணம் பெறவோ மாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நேசத்தை ஏற்படுத்தும் விடயங்களில் மிகவும் சிறப்புக்குரிய விடயமொன்றின் பால் வழிகாட்டுகிறார்கள். அதுதான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவதாகும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழத்துரைக்கும் ஒன்றாக ஸலாத்தை ஏற்படுத்தித்தந்துள்ளான்.

فوائد الحديث

ஈமானின் மூலம் மாத்திரமே சுவர்க்கம் நுழையலாம்.

தான் விரும்புவதை தனது சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது ஈமானின் பூரணத்துவத்தைக் காட்டும் விடயங்களில் ஒன்றாகும்.

ஸலாத்தைப் பரப்புதல் அதனை முஸ்லிம்களுக்கு கூறுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.ஏனெனில் அதனுள் நேசமும், மக்களுக்கு பாதுகாப்பும் உண்டு.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கூற்றில் ' பைனகும்' என்ற வார்த்தையானது, ஸலாம் முஸ்லிம்களுக்கு மாத்திரமே கூறப்படும் என்பதையே காட்டுகிறது.

ஸலாம் கூறுவதினால் உறவு முறிப்பு, பகை , புறக்கணிப்பு போன்ற விடயங்கள் நீங்கிவிடுகிறது.

முஸ்லிம்களுக்கு மத்தியில் நேசம் கொள்வதன் அவசியம் பற்றி விளக்கியிருத்தல், அத்துடன் ஈமானின் பரிபூரணத்திற்கு சான்றாக அமைந்து விடும்.

இந்த ஹதீஸின் இறுதியில் ஸலாம் சொல்லும் முறை அல்லது அதன் முழு அறபுவடிவம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு என்பதாகும். ஆனால் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினாலும் அதுவும் போதுமானதாகும்.

التصنيفات

உடல் செயற்பாடுகளின் சிறப்புகள்