ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமாகும். அவனோடு யுத்தம் செய்வது இறைநிராகரிப்பாகும்

ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமாகும். அவனோடு யுத்தம் செய்வது இறைநிராகரிப்பாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது பாவமாகும். அவனோடு யுத்தம் செய்வது இறைநிராகரிப்பாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு ஏசுவதை நபியவர்கள் தடுப்பதோடு, அது 'புஸூக்' என்றும் கூறுகின்றார்கள். அதாவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வதாகும். மேலும், ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுடன் போரிடுவது, நிராகரிப்பை ஏற்படுத்தும் செயலாகும். ஆனாலும், அது சிறிய நிராகரிப்பாகும்.

فوائد الحديث

ஒரு முஸ்லிமின் மானத்தையும், உயிரையும் கண்ணியப்படுத்துவது கட்டாயமாகும்.

அநியாயமாக ஒரு முஸ்லிமுக்கு ஏசுவதன் மோசமான பின்விளைவு. ஏனெனில், அநியாயமாக ஏசுபவன் பாவியாகும்.

ஒரு முஸ்லிக்கு ஏசுவதும், அவனுடன் போரிடுவதும் ஈமானைப் பலவீனப்படுத்திக் குறைக்கச் செய்யும்.

சில செயற்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் பெரிய குப்ருடைய அளவுக்குச் செல்லாவிட்டாலும், குப்ர் என அழைக்கப்படும்.

இங்கு குப்ர் என்பதன் மூலம் நாடப்படுவது, அஹ்லுஸ் ஸுன்னாக்களின் ஏகோபித்த கருத்தின் படி, சிறிய குப்ராகும். ஏனெனில், முஸ்லிம்கள் தமக்கிடையில் பிணக்குகொண்டு, யுத்தம் செய்யும் சந்தர்ப்பங்களிலும், ஈமானிய சகோதரத்துவம் இருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : நம்பிக்கையாளர்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், அவ்விரு சாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள்; பின்னர், அவர்களில் ஒருசாரார் மற்றவர்மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால், நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள்; (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான். நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் (யாவரும்) சகோதரர்களே;

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், தீய குணங்கள்