'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில்…

'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

'யார் நபி மீது வேண்டுமேன்றே பொய்யாக ஒரு வார்த்தை அல்லது செயலை நபி கூறியதாக கூறுகின்றாரோ மறுமையில் அவரின் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். அதுவே நபி மீது பொய்யுரைத்ததற்கான கூலியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்'.

فوائد الحديث

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பது நரகத்தில் நுழைவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது பொய்யுரைப்பது என்பது ஏனைய மனிதர்கள் விடயத்தில் பொய்யுரைப்பது போன்றதன்று. காரணம் நபி மீது பொய்யுரைப்பதன் விளைவாக இம்மை மற்றும் மார்க்க விவகாரங்களில் பெரும் தீங்கை ஏற்படுத்திவிடும்.

ஹதீஸ்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்தி அது நபியவர்களின் கூறினார்களா என்பதை திட்டப்படுத்திக் கொள்ள முன் அவற்றைப் பரப்புவது குறித்த எச்சரிக்கை இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளமை.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், தீய குணங்கள்