உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின்…

உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்". 'யார் அல்லாஹ்விடம் உண்மையாகவே ஷஹாதத்தை (வீரமரணத்தைக்) கேட்கிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்தாலும், அல்லாஹ் அவரை தியாகிகளின் (இறைபாதையில் வீரமரணம் அடைந்தோர்) தரத்திற்கு உயர்த்துவான்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்". 'யார் அல்லாஹ்விடம் உண்மையாகவே ஷஹாதத்தை (வீரமரணத்தைக்) கேட்கிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்தாலும், அல்லாஹ் அவரை தியாகிகளின் (இறைபாதையில் வீரமரணம் அடைந்தோர்) தரத்திற்கு உயர்த்துவான்.'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டு ஷஹாதத்தை –வீரமரணம் அடைவதை அல்லாஹ்விடம் கேட்பவர், அவரது நிய்யத்தில் -எண்ணத்தில்- அல்லாஹ்வுக்காக எனும் உளப்பரிசுத்ததோடு உண்மையாளராகவும் இருந்தால் அவரின் உண்மையான –தூய்மையான நிய்யத்தின் காரணமாக அவர் (ஜிஹாத்) அறப்போரில் அல்லாது தனது படுக்கையில் மரணித்தாலும் அறப்போரில் வீரமரணமடைந்தோரின் அந்தஸ்த்தைப் பெறுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

ஒருவரிடம் ஒரு செயலை செய்வதற்கு தூய்மையான எண்ணத்துடன் அதற்கான ஊக்கமும் முயற்சியும் இருப்பின், அவரின் தூய்மையான எண்ணத்தின் காரணமாக அச்செயலை அவர் செய்யா விடினும் அவருக்கான கூலியும் வெகுமதியும் கிடைக்கும் என இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.

அறப்போரில் கலந்து கொண்டு அதில் வீரமரணம் அடைவதை ஊக்கப்படுத்தப்பட்டிருத்தல்.

ஒரு சிறிய செயலுக்குப் பதிலாக சொர்க்கத்தின் உயர்ந்த பதவிகளை வழங்குவதன் மூலம் இந்த உம்மத்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளமை.

التصنيفات

உளச் செயற்பாடுகள், போரின் சிறப்பு