' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது…

' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.'

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவரைச் சந்திக்க விரைந்தனர், (அவ்வேளை) 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்!' என்று மூன்று முறை கூறப்பட்டது. நான் மக்களுடன் அவரைப் பார்க்க வந்தேன், அவரது முகத்தை நான் தெளிவாகக் பார்த்த போது, அவரது முகம் பொய்யரின் முகம் அல்ல என்பதை அறிந்தேன். அவர்கள் கூறியதில் நான் முதலில் கேட்டது: ' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.'

[ஸஹீஹானது-சரியானது] [رواه الترمذي وابن ماجه وأحمد]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் அவரைக் கண்டு அவர்களை நோக்கி விரைந்து சென்றார்கள். அவ்வாறு சென்றோரில் யூதர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அவர்கள் நபியவர்களை பார்த்ததும் அவர்களின் முகத்தில் பிரகாசமும் அழகும் உண்மையான மதிப்பச்சமும் பிரதிபளித்ததினால் அவர்கள் ஒரு பொய்யர் அல்ல என்பதை புரிந்துகொண்டார். அவர் சுவர்க்த்தினுள் நுழைவதற்கு காரணமாக உள்ள சில நற்காரியங்களை மக்களுக்கு வலியுறுத்திய விடயங்களையே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து முதன் முதலில் கேட்டார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஸலாத்தைப் பரப்புவதுடன் அதனை அறிமுகமானவர்கள் அறிமுகமற்றவர்கள் யாவருக்கும் அதிகமாக சொல்லுதல். இரண்டாவது: தர்மம் அன்பளிப்பு மற்றும் விருந்தோம்பல் மூலம் பிறருக்கு உணவளித்தல். மூன்றாவது: தந்தை அல்லது தாயின் உறவுகள் மற்றும் உடன்பிறந்தோர் உறவுகளை சேர்ந்து நடத்தல். நான்காவது : மக்கள் உறங்கும் வேளை உபரியான இரவு நேரத் தொழுயை (கியாமுல்லைலை) தொழுதல்.

فوائد الحديث

முஸ்லிம்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்புதல்; வரவேற்கத்தக்க விடயம். அத்துடன் முஸ்லிம் அல்லாதோருக்கு முதலில் ஸலாம் கூறுவதை தவிர்த்தல் வேண்டும். அவ்வாறு முஸ்லிம் அல்லாதவர் ஸலாம் கூறினால் அவருக்கு : 'வஅலைக்கும்; என்று பதில் கூறுதல் வேண்டும்.

التصنيفات

இரவுத் தொழுகை, நல்லமல்களின் சிறப்புகள்