إعدادات العرض
'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்
'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'தனது ரப்பை நினைவுகூறுபவனுக்கும், தனது ரப்பை நினைவுகூறாதவனுக்கும் உதாரணம், உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும். முஸ்லிம் அவர்களது அறிவிப்பில், 'அல்லாஹ்வை நினைவு கூறப்படும் வீட்டிற்கும், நினைவு கூறப்படாத வீட்டிற்கும் உதாரணம் உயிருள்ளவனும் உயிரற்றவனும் ஆகும்.' என்று உள்ளது.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Kiswahili Português සිංහල Nederlands Tiếng Việt অসমীয়া ગુજરાતી پښتو മലയാളം नेपाली Magyar ქართული తెలుగు Македонски Svenska Moore Română Українська ไทย मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Wolof ភាសាខ្មែរ ಕನ್ನಡ Yorùbá Српски Malagasy Kinyarwanda Shqipالشرح
நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை நினைவுகூர்பவனுக்கும், நினைவுகூறாதவனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் போது, உயிருள்ளவனுக்கும் உயிரற்றவனுக்கும் இடையில், பயனிலும், அழகிய வெளித் தோற்றத்திலும் உள்ள வேறுபாட்டைப் போல என்று அடையாளப்படுத்துகின்றார்கள். தனது ரப்பை நினைவுகூர்பவன் வெளித்தோற்றம் வாழ்க்கை எனும் ஒளியாலும், உள்ளம் அறிவு ஞானம் எனும் ஒளியாலும் அலங்கரிக்கப்பட்டவனைப் போல. அவனில் பலன்கள் உள்ளது. அல்லாஹ்வை நினைவுகூறாதவன், வெளியில் செயலற்றவனாகவும், உள்ளத்தில் ஒன்றுமில்லாதவனாகவும் இருக்கும் மரணித்த பிணத்தைப் போல. அவனில் எப்பயனும் இல்லை. வீடுகளும் இவ்வாறுத்தான். அங்கு வசிப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களாக இருந்தால், உயிருள்ள வீடு எனப்படும். அவ்வாறில்லா விட்டால், அங்கிருப்பவர்கள் அல்லாஹ்வை நினைவுகூறாத காரணத்தினால், இறந்த வீடு எனப்படும். வீடு, உயிருள்ளது, உயிரற்றது எனக் கூறப்பட்டுள்ளதன் மூலம் நாடப்படுவது அதில் வசிப்பவர்களே!.فوائد الحديث
அல்லாஹ்வை நினைவுகூற ஆர்வமூட்டல் மற்றும் அவனை மறந்திருப்பதை எச்சரித்தல்.
உடம்புக்கு உயிர் வாழ்வைக் கொடுப்பது போன்று, இறைநினைவு உள்ளத்திற்கு வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு கருத்தை மிக இலகுவாக புரிய வைப்பதற்கு உதாரணம் கூறல் நபிவழிகாட்டலாகும்.
இமாம் நவவி கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸில், வீடுகளில் அல்லாஹ்வை நினைவுகூறவது வலியுறுத்தப் படுகின்றது.
இமாம் நவவி கூறுகின்றார்கள்: மரணித்தபின் ஒருவர் நல்ல நிலைக்கே செல்வாராக இருப்பினும், நீண்ட காலம் உயிரோடு இருந்து வணக்கங்களில் ஈடுபடப் கிடைப்பது அதை விடச் சிறப்பாகும். ஏனெனில், உயிரோடிருப்பவர் அவரை விட மேலும் வணக்கங்களைச் செய்து அவரோடு வந்து இணைந்து கொள்வார்.
التصنيفات
திக்ரின் பயன்கள்