“மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும்,…

“மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: “மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும். அபூ கிலாபா அவர்கள் கூறுகிறார்கள்: இங்கே நபியவர்கள் குடும்பத்தை முதலில் குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்தும் அபூகிலாபா குறிப்பிடுகையில் குழந்தைககள் உள்ள ஒரு குடும்பத்திற்கு செலவு செய்யும் ஒரு மனிதனை விடவும் மிகப்பெரும் நற்கூலியை பெறும் உயர் மனிதன் எவர்தான் இருக்க முடியும். காரணம் அவர் அவர்களை சுயகௌரவத்துடன் வாழ வைக்கிறார் அல்லது அவரின் மூலம் அல்லாஹ் நலனை பெற்றுக்கொடுத்து அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குகிறான்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செலவு செய்வதன் சில வடிவங்கள் குறித்து தெளிவுபடுத்தி, அவை, (அதாவது செலவு செய்ய வேண்டிய பகுதிகள்) அதிகமாகும் போது அதில் உங்களுக்கு மிகவும் கட்டாயமானது என்பதின் அடிப்படையில், மிகவும் பொருத்தமான செலவீன முறையை வரிசைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார்;. அந்தவகையில் ஒரு முஸ்லிம் தான் அவசியம் செலவு செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட,(தம்மைச் சார்ந்தவர்களான) மனைவி பிள்ளை போன்றோருக்கு செலவு செய்யும் செல்வமே அதிக கூலியைப் பெற்றுத்தரும் செல்வமாகும் என நபியவர்கள் குறிப்பிட்டார்கள். அதன் பின் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட வாகனத்திற்காக செலவு செய்வது. அல்லாஹ்வின் பாதையில் போராடும் தனது தோழர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்வது.

فوائد الحديث

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலவுசெய்தல், சிறப்பின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருத்தல். செலவு செய்யவேண்டிய விவகாரங்கள் அதிகமாகும் போது மேற்படி ஒழுங்கு கருத்திற் கொள்ளப்படும்.

சிறப்பின் அடிப்படையில், பிறருக்கு செலவு செய்வதை விட குடும்பத்திற்கு செலவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது தெளிவு படுத்தப்பட்டிருத்தல்.

அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரிய ஆயுதங்கள் மற்றும் போர்வீரர்களை ஜிஹாதிற்காக தயார்படுதுவதற்காக செலவு செய்வது, செலவீனங்களில் மிகவும் உண்ணதமானதாகும்.

'ஸபீலுல்லாஹ'; என்பது ஹஜ்ஜைப்போன்ற எல்லா வகையான நற்செயல்களையும் குறிக்கும் எனவும் கூறப்படுகிறது.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள், உடல் செயற்பாடுகளின் சிறப்புகள்