நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து…

நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை வைத்துவிட்டான்

நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான், ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை வைத்து விட்டான் என நபி ஸல் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழி யல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நிச்சயமாக ஷைத்தான் அரபு தீபகற்பத்தில் உள்ளவர்கள் மக்கா வெற்றிக்கு முன் இருந்தது போன்று மீண்டும் விக்கிரக வணக்கத்தை நோக்கி, இறை நிராகரிப்பை நோக்கி சென்று விடுவார்கள் என்ற விடயத்தில் ஷைத்தான் நிராசையடைந்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தையும், பகைமையையும், பிரச்சினைகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தி பிளவுக்கும், பிரிவினைக்கும் வழிவகுப்பான்.

التصنيفات

தீய குணங்கள்