'நான் விண்ணுலகப் பயணம் சென்ற இரவில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம், 'முஹம்மதே! உமது…

'நான் விண்ணுலகப் பயணம் சென்ற இரவில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்திவையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், மதுரமான நீரைக் கொண்டது என்றும் அவர்களிடம் கூறுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நான் விண்ணுலகப் பயணம் சென்ற இரவில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்திவையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், மதுரமான நீரைக் கொண்டது என்றும் அவர்களிடம் கூறுங்கள் மேலும், அவை வெற்றுப் பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவை தான் என்றும் கூறுங்கள்' என்று கூறினார்கள்.

[حسن بشواهده] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

இஸ்ரா, மிஃராஜ் இரவின் போது தாம், இறைவனின் உற்ற தோழர், இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்ததாகவும், அவர் தம்மிடம், 'முஹம்மதே! உமது சமுதாயத்திடம் எனது ஸலாமை எத்தி வையுங்கள். மேலும், சுவனம் தூய்மையான மண்ணைக் கொண்டது என்றும், உவர்ப்பற்ற, மதுரமான நீரைக் கொண்டது என்றும், அவை விசாலமான, சமாந்திரமான, மரங்களற்ற பூமிகள், அதில் நட்டப்படும் மரங்கள், நல்ல வார்த்தைகளாகிய, ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் ஆகியவைதான் என்றும், ஒரு முஸ்லிம் அவற்றை திரும்பத் திரும்பக் கூறும் போதெல்லாம் சுவனத்தில் அவருக்கு ஒரு மரம் நட்டப்படும் என்றும்' கூறுங்கள்' என்று நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.

فوائد الحديث

திக்ரைத் தொடர்ந்து பேணி, சுவனத்தில் மரங்களை அதிகப்படுத்திக்கொள்ள ஆர்வமூட்டல்.

இந்த உம்மத்தின் சிறப்பு. அதாவது, அவர்களுக்கு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் கூறி அனுப்பியுள்ளார்கள்.

அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுமாறு, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களது சமுதாயத்திற்கு ஆர்வமூட்டியுள்ளமை.

தீபீ அவர்கள் கூறுகின்றார்கள் : சுவனம் வெற்றுப் பூமிகளாகும். பின்பு அல்லாஹ் தனது பேருபகாரத்தினால், அமல்செய்பவர்களின் அமல்களுக்கு ஏற்ப மரங்களையும், மாளிகைகளையும் உருவாக்கினான். அமல் செய்யும் ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் அமல்களுக்கு ஏற்பத் தனித்தனியான மரங்கள் உண்டு. பின்பு, அல்லாஹ் தஆலா ஒவ்வொருவரும் எந்த அமலுக்காகப் படைக்கப்பட்டுள்ளார்களோ, அதை இலகுபடுத்திக்கொடுத்து, அந்த கூலியை அடையச் செய்வதால், அவர்கள் அம்மரங்களை நட்டியவர்கள் போன்றாகி விடுகின்றனர்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்