நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்தும்,ஏனைய கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் தோன்றுகின்றவைகளாகும்

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்தும்,ஏனைய கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் தோன்றுகின்றவைகளாகும்

நல்ல கனவு,இன்னொரு அறிவிப்பில் அழகிய கனவு அல்லாஹ்விடமிருந்து தோன்றுகின்றவை. மேலும் தௌிவற்ற கனவு ஷைத்தானிடமிருந்து தோன்றுபவை, எனவே எவரேனும் தனக்கு வெறுப்பூட்டும் எதையேனும் கண்டால் அவர் தனது இடது புறத்தில் மூன்று தடவை துப்பி விட்டு,மூன்று தடவைகள் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடிக் கொள்வாராக.அப்பொழுது அது அவருக்கு கேடு விளைவிக்காது"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்என அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும்"உங்களில் எவரேனும் தனக்கு வெறுப்பூட்டும் எதையேனும் கனவில் கண்டால் அவர் தனது இடது புறத்தில் மூன்று தடவைகள் துப்பி விட்டு, ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் மூன்று தடவைகள் பாதுகாப்பு தேடிக் கொள்வாராக.மேலும் அவர் தான் படுத்திருந்த பக்கத்தை விட்டும் மறுபக்கம் திரும்பிக் கொள்வாராக"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஷைத்தானின் சிக்கலும்,அவனின் குழப்பமும் இல்லாத கனவுகள் அல்லாஹ் தன் அடியார்கள் மீது சொரிந்துள்ள அருட்கொடைகளையும்,முஃமின்களுக்கு அவன் தெரிவிக்கும் நற்செய்திகளையும் மற்றும் அவனை மறந்தவர்களையும் புறக்கணித்தவர்களையும் எச்சரிக்கை செய்கின்ற, நினைவூட்டுகின்ற விடயங்களளையும் சார்ந்தவைகளாக விளங்குகின்றன என்று ரஸூல் (ஸல்) அவ்கள் இந்த ஹதீஸில் அறிவித்துள்ளார்கள்.மேலும் தௌிவற்ற கனவுகளோ! ஷைத்தான்கள் மனித ஆத்மா மீது குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தவும், அதனை அச்சுறுத்தவும்,அதன் மீது கவலையையும்,துக்கத்தையும் ஏற்படுத்தும்படியான காரியங்களை கொண்டு வரும் நோக்கில் உண்டு பண்ணுகின்றவைகளாகும்.ஏனெனில் ஷைத்தான் மனிதனின் எதிரியாக இருக்கின்றபடியால் அவன் மனிதனுக்கு ஊறும், கவலையும் தரும்படியான விடயங்களையே விரும்புகிறான்.எனவே மனிதன் தனது கனவில் தன்னை தயங்கச் செய்கின்ற,அச்சுறுத்துகின்ற, தனக்குக் கவலை தருகின்ற எதையேனும் கண்டால், அவன் ஷைத்தானின் சூழ்ச்சியையும் அவனின் ஊசலாட்டதையும் தடுக்குபடியான வழிகளைக் கையாள்வது அவசியம். மேலும் ஹதீஸில் குறிப்பிடடுள்ளவாறு இதன் பரிகாரம் முதலாவது அவன் தனது இடது புறத்தில் மூன்று தடவைகள் துப்பிவிட வேண்டும்.இரண்டாவது ஷைத்தானின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் மூன்று தடவைகள் பாதுகாவல் தேடுதல் வேண்டும்.மூன்றாவது அவன் தன் இடது புறமாக படுத்திருந்தால் வலது பக்கமாகவும், வலது புறமாகப் படுத்திருந்தால் இடது பக்கமாகவும் திரும்பிவிட வேண்டும்.மேலும் அவை அல்லாஹ்வின் தூதரின் வாக்கினை உண்மைப்படுத்தவும், தீமைகளைத் தடுக்கவும் காரணிகள் என்று அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையிலும் முன் கூறிய இந்த வழிகளின் பிரகாரம் அவன் செயற்படுவானாகில் அல்லாஹ்வின் உதவியால் இந்தக் கனவின் மூலம் அவனுக்கு எந்தத் தீமையும்.ஏற்படாது.

التصنيفات

கனவின் ஒழுங்குகள்