நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது…

நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது

அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹூ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக கூறினார்கள் : நான் உங்களுக்கு ஒர் அமலை காண்பித்துதரவா ? அது உங்களின் எல்லா அமல்களைவிடவும் சிறந்தது. உங்கள் அதிபதியிடம் அது மிகவும் தூய்மையானது. உங்கள் அந்தஸ்த்தை மிகவும் அதிகப்படுத்தக்கூடியது. தங்கம் வெள்ளியை செலவளிப்பதை விடவும் உங்களுக்குச் சிறந்தது. மட்டுமல்ல, நீங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்கள் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்தது ஆகும். அதற்கு நபித்தோழர்கள் "ஆம்" அதனை எமக்கு காண்பித்துத் தாருங்கள் என்றார்கள். நபியவர்கள் கூறினார்கள் அதுதான் அல்லாஹ்வை- திக்ர் செய்வது –நினைவுகூர்வது என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه الترمذي وابن ماجه وأحمد]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : அதிபதியான அல்லாஹ்விடத்தில் அமல்களில் மிகவும் சிறந்ததும் உன்னதமானதும், மிகவும் அபிவிருத்திமிக்கதும், தூய்மை நிறைந்துமான ஒன்றை உங்களுக்கு சொல்லித்தருவதை நீங்கள் விரும்புகிறீர்களா? சுவர்க்கத்தில் உங்களின் அந்தஸ்த்தை மிகவும் உயர்த்தக் கூடியதும், தங்கம் வெள்ளியை தர்மம் செய்வததை விட மிகவும் நன்மையை பெற்றுத்தரக் கூடியதும்? போரில் காபிர்களை நேருக்குநேர் எதிர் கொண்டு, நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டிவீழ்த்துவதை விடவும் மிகவும் சிறந்ததும் ஆகும், அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அனைத்து நிலைகள் மற்றும் நிலமைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும் என்றார்கள்.

فوائد الحديث

தொடராக, அல்லாஹ்வை வெளிப்படையிலும் மறைமுகமாகவும் நினைவுகூர்வது –திக்ர் செய்வது- அல்லாஹ்வை நெருங்குவதில் மிகவும் உயர்வான ஒரு இபாதத்தாகவும், அல்லாஹ்விடத்தில் மிகபெரிய நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.

எல்லா அமல்களும் அல்லாஹ்வை நினைவு கூறுவதனை நிலைநாட்டவே கடமையாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகையில் (என்னை நினைவு கூறுவதற்காக தொழுகையை நிலைநாட்டுவாயாக.) என்று குறிப்பிடுகிறான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகையில் ' அல்லாஹ்வை நினைவு கூறவே கஃபாவை தவாப் செய்வது ஸபா மர்வாக்கிடையில் தொங்கோட்டம் ஒடுவது, ஜம்ராத்தில் கல்லெறிதல் போன்றனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்கள் . ஆதாரம் : அபூதாவூத் ,திர்மிதி.

அல் இஸ்ஸுப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள் தனது கவாஇத் என்ற நூலில் இந்த ஹதீஸ் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார் : ' இந்த ஹதீஸ் எல்லா வணக்க வழிபாடுகளிலும் ஒருவர் ஈடுபடும் போது அவருக்கு ஏற்படுகின்ற சிரமத்தின் அளவுக்கு கூலி வழங்கப்படும் என்பதைக் குறிக்காது மாறாக அதிகமாக செய்யும் அமல்களுக்கு வழங்கப்படும் கூலியை விடவும் குறைவான அமல்களுக்கு அதிகம் கூலி வழங்கப்படுவதையே குறிக்கிறது. அதாவது குறித்த அமல் பெற்றிருக்கும் கண்ணியத்தின் தராதரத்திற்கு ஏற்பவே இதற்கான கூலி கிடைக்கிறது.

இமாம் முனாவி அவர்கள் தனது நூலான 'பய்ழுல் கதீர்' என்ற நூலில் இந்த ஹதீஸ் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் : அதாவது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள திக்ர் என்பது அதனை முன்வைத்து பேசப்படுவோரின் நிலைக்கு ஏற்ப அது மிகவும் சிறப்புமிக்கதாக அமையும். போரில் இஸ்லாத்திற்கு பயனை ஈட்டித்தரக்கூடிய ஒரு துணிவுள்ள வீரனின் திக்ர் ஜிஹாதாகும். அல்லது தனது செல்வத்தின் மூலம் ஏழைகள் பயன்பெரும் ஒரு செல்வந்தனின் திக்ர் என்பது தர்மமாகும். ஹஜ் செய்ய வசதிபடைத்தவரின் திக்ர் ஹஜ் ஆகும். அல்லது யாருக்கு பெற்றோர்கள் இருக்கின்றனரோ அவர்கள் அவரிருவருக்கும் பணிவிடை செய்வது திக்ர் ஆகும் . இது போன்று ஏனைய விடயங்களையும் இணைத்துக் கூற முடியும்.

திக்ரின் தரங்களை பின்வருமாறு குறிப்பிட முடியும். திக்ரின் முழுமையான நிலை உள்ளத்தால் சிந்தித்து நாவால் கூறுவதாகும். அதன் பின் உள்ளத்தால் மாத்திரம் நினைப்பது. இதற்கு உதாரணமாக சிந்திப்பதைக் குறிப்பிட முடியும். அதன் பின் நாவால் மாத்திரம் திக்ர் செய்வது. இவை ஒவ்வொன்றிற்கும் -அல்லாஹ் நாடினால்-கூலி உண்டு.

காலை மாலை திக்ர் பள்ளிவாயில் மற்றும் மல சல கூடத்தினுள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓதுகின்ற சந்தர்ப்ப திக்ர்களை பேணி ஒரு முஸ்லிம் ஒதி வருவது அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யும் கூட்டத்தினருடன் அவனை சேர்த்து விடும்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்