'என்னைப் பற்றி பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்''

'என்னைப் பற்றி பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்''

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் மற்றும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் அறிவிப்பதாவது: 'என்னைப் பற்றி பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்''

[ஸஹீஹானது-சரியானது] [رواه مسلم في مقدمته]

الشرح

ஒருவர் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை கூறுகிறார் அதனை கேட்கும் நபர் அந்த செய்தி நபியவர்களின் மீது பொய்யாக சொல்லப்பட்ட செய்தி என்று அறிகிறார் அல்லது அதில் சந்தேகம் ஏற்படுகிறது அப்படி இருந்து அந்த செய்தியை அறிவிப்பாராயின் அந்தப்பொய்யான செய்தியை சொன்ன நபருடன் இவரும் கூட்டுச்சேருகிறார் என நபி ஸல்லல்லாஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

நபி ஸல் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை ஆராய்ந்து, அவற்றைக் கூறுவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமாகும்.

பொய்யை உருவாக்குபவரும், அதை விவரித்து பரப்புபவரும் இருவருமே பொய்யர்கள் ஆவார்.

ஒரு ஹதீஸின் பொருள் அது என்று ஒருவர் அறிந்திருந்தாலும் அல்லது சந்தேகித்தாலும் கூட அதை மேற்கோள் காட்டுவது தடைசெய்யப் பட்டுள்ளது. ஆம், அதற்கு எதிராக எச்சரிப்பதற்காக அது மேற்கோள் காட்டப்பட்டால், அது வேறு விஷயம்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், தீய குணங்கள்