'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தன் கரத்தை…

'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான் (நீட்டுகிறான்)! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான் (நீட்டுகிறான்)! இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கரத்தை விரித்து வைத்திருக்கிறான்! சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (கியாமத் நாள்) வரை ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான்!

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தனது அடியார்களின் தவ்பாவை –பாவமீட்சியை- அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஒரு அடியான் பகலில் ஒரு பாவத்தை –குற்றத்தை-செய்து இரவில் தனது பாவத்தை மன்னிக்குமாறு தவ்பா செய்தால் அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கொள்கிறான். ஒரு அடியான் இரவில் பாவமொன்றை செய்து பகலில் அதற்காக தவ்பா செய்தால் அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் அடியார்களின் தவ்பாவினால் மகிழ்ச்சியடைந்து அதனை ஏற்றுக்கொள்ளும் முகமாக அவனின் கரத்தை நீட்டுகிறான். மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையில் தவ்பாவின் -பாவமீட்சிக்கான- வாயில் திறந்தே இருக்கும். இது உலக முடிவைக் குறிக்கும். மேற்கில் சூரியன் உதயமானால் தவ்பாவின் வாயில் மூடப்பட்டு விடும்.

فوائد الحديث

தவ்பாவின் வாயில் திறந்திருக்கும் காலமெல்லாம் தவ்பா ஏற்றுக்கொள்வது தொடர்ந்திருக்கும். அவ்வாயில் சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதுடன் மூடப்பட்டு விடும். ஆகவே ஒரு மனிதன் தனது உயிர் மூச்சு தொண்டைக்குளியை அடைய முன்னர் தவ்பா செய்து கொள்ளுதல் வேண்டும்.

பாவம் காரணமாக ஒருவர் நிராசை அடையவோ விரக்தியுரவோ கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் விசாலமானது மேலும் தவ்பாவின் வாயிலும் திறந்த நிலையில் உள்ளது.

தவ்பாவின் நிபந்தனைகள் : 1-பாவத்திலிருந்து முற்றாக விலகுதல் 2- செய்த பாவத்திற்காக வருந்துதல் 3-ஒரு போதும் குறித்த பாவத்தை செய்வதில்லை என உறுதி கொள்ளுதல் இவை அல்லாஹ்வின் உரிமை சார்ந்ததாக இருப்பின் இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறித்த குற்றம் அல்லது பாவம் மனிதர்களுடன் தொடர்பானதாக இருப்பின் அவரின் தவ்பா செல்லுபடியாவதற்கு குறித்த உரிமையை உரிமையாளருக்கு வழங்க வேண்டும், அல்லது குறித்த உரிமையாளர் அவரை மன்னிக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாகும்.

التصنيفات

பாவமீட்சி