யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர்…

யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள்.; ஏனெனில் ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரின் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்கப் படமாட்டார். அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவர்கள் - உதாரணமாக, அறியாமை காலத்தில் வணங்கப்பட்ட லாத் அல்லது உஸ்ஸாவின் சிலைகளின் மீது சத்தியம் செய்பவர்கள் - தங்கள் தவறை சரிசெய்து, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூற வேண்டும். தவ்ஹீத் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை) என்ற வாசகத்தைச் சொல்வது கட்டாயமாகும். அந்தக் கூற்று, இணைவைப்பிலிருந்து ஒருவர் விலகி இருப்பதைப் பற்றிய அறிவிப்பாகவும், ஒருவரின் பொய்யான சத்தியத்திற்கான பரிகாரமாகவும் உள்ளது. ஒரு நபர் தனது நண்பரை சூதாட்டம் விளையாட அழைத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். சூதாட்டம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குள் பணத்தை வைத்து போட்டியிடுவதாகும்;. அதில் வெற்றியாளர் அனைத்துப் பணத்தையும் எடுத்துக் கொண்டு, பங்கேற்பாளர்களில் ஒருவர் லாபமடைவார், மற்றவர் நஷ்டமடைவார். இவ்வாறு சூதாட்டத்திற்கு அழைத்தவர் அவர் தனது தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஏதாவது ஒன்றை தர்மம் செய்வது விரும்பத்தக்கது.

فوائد الحديث

அல்லாஹ்வின் மீதும், அவனது பெயர்கள் மற்றும் பண்புகளின் மீதும் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருடைய பெயராலும் சத்தியம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸா போன்ற சிலைகளின் பெயராலும், நேர்மை போன்ற குணங்களின் பெயராலும், நபி (ஸல்) அவர்களின் பெயராலும், அல்லது வேறு எதன் பெயராலும் சத்தியம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இமாம் அல்-கத்தாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'அனைத்திற்கும் இறைவனாகிய மகத்துவிமிக்க அல்லாஹ்வின் மீது மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. யாராவது அல்-லாத் அல்லது வேறு எதன் மீதும் சத்தியம் செய்தால், அவர் காஃபிர்களைப் போன்றவர்.'அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற தவ்ஹீத் கூற்றை கூறி தனது தவறைத் திருத்திக் கொள்ளுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

அல்லாஹ் அல்லாத வேறொருவரின் மீது சத்தியம் செய்தால், சத்தியத்தை மீறியதற்காகப் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, ஒருவர் வருந்தி மனந்திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். ஏனென்றால் அது மிகவும் கடுமையான பாவம், மனந்திரும்புதல் (தவ்பா செய்வதை) தவிர அதை மன்னிக்க முடியாது.

சூதாட்டத்தின் அனைத்து வடிவங்களும் வகைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மது மற்றும் சிலைகளுடன் சேர்த்து அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஒரு தீமை இது, அதைத் தடைசெய்ததாக அறிவித்துள்ளான்.

தீமையைச் செய்த உடனேயே அதை விட்டு விலகுவது கடமையாகும்.

ஒருவர் ஒரு தீமையைச் செய்தால், அதைத் தொடர்ந்து ஒரு நன்மையைச் செய்யட்டும், ஏனெனில் நன்மையான செயல்கள் தீமைகளை அழித்துவிடும்.

التصنيفات

தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் நாவின் விபரீதங்களும்