தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் நாவின் விபரீதங்களும்

தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் நாவின் விபரீதங்களும்

1- யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின்மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படும் வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், ''வா சூது விளையாடுவோம்' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்'

2- நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”