நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று…

நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான்கு பண்புகள் குறித்து எச்சரித்துள்ளார்கள். அவை ஒரு முஸ்லிமிடம் காணப்படின் அப்பண்புகளின் காரணமாக நயவஞ்சகர்களுக்கு மிகவும் ஒப்பானவராக இருப்பார். பெரும்பாலும் இப்பண்புகள் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவரின் நிலை நயவஞ்சகனை ஒத்த நிலையாகும். ஆனால் இப்பண்புகள் யாரிடம் அரிதாக காணப்படுகிறதோ அவர் இவ்வட்டத்தினுள் வரமாட்டார். அப்பண்புகளாவன: முதலாவது: பேசினால் வலிந்து பொய் பேசுவான் அவனின் பேச்சில் உண்மை இருக்காது. இரண்டாவது: ஒப்பந்தம் ஒன்றை செய்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மோசடி செய்வான். மூன்றாவது: வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மாறுசெய்வான். ஒருவருடன் சண்டை சச்சரிவில் ஈடுபட்டால் கடும் பகையை காட்டுவதோடு நேர்மை தவறி நடப்பதோடு, குறித்த நபருக்கு மறுப்புத் தெரிவிப்பதிலும் அவரின் கூற்றை பொய்யாக்குவதிலும் சூழ்ச்சி செய்து பொய்யையும் புரட்டையும் பேசுவான். நயவஞ்சகம் என்பது உள்ளிருப்பதற்கு மாற்றமாக வெளியே ஒன்றை செய்தல். இக்கருத்து இப்பண்புகளைப் பெற்றோரிடத்தில் காணப்படுகிறது. அவர் தன்னிடம் பேசுபவர், வாக்குறுதி அளிப்பவர், நம்பிக்கை வைப்பவர், வாதிடுபவர் மற்றும் உடன்படிக்கை செய்பவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறார். மாறாக, நம்பிக்கையின்மையை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நயவஞ்சகர் அல்ல. இந்த குணாதிசயங்களில் ஒன்றைக் கொண்டவர் அதைக் கைவிடும் வரை நயவஞ்சகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளார்.

فوائد الحديث

முனாபிக்கின் (நயவஞ்சகனின்) சில பண்புகளை அதில் விழுந்துவிடாதிருக்க அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நோக்கில் சில பண்புகள் தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.

ஹதீஸின் கருத்து : இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட பண்புகள் யாவும் நயவஞ்சகத்தின் பண்புகளாகும். மேலும் இவற்றைக் கொண்ட ஒருவர் இந்தப் பண்புகளில் நயவஞ்சகர்களைப் போலவே இருக்கிறார் அவர்களின் குணங்குகளை பின்பற்றியவராக இருப்பார். ஆனால் இது இஸ்லாத்தை வெளிப்படுத்தி குப்ரை மறைக்கும் நயவஞ்சகத்தில் வராது. என்பது ஒரு கருத்து. இரண்டாவாதாக இப்பண்புகள் ஒருவரிடம் அதிகமாகி அல்லது மிகைத்து, இப்பண்புகள் குறித்து அலட்சியமாக இருப்பதோடு இவ்விவகாரத்தை அற்பமாக கருதினால், அவர் பெரும்பாலும் பிழையான நம்பிக்கை கோட்பாட்டில் இருக்கிறார்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் குறிப்பிடுகையி;ல் : மார்க்கத்தின் அடிப்படை மூன்று விடயங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை : பேச்சு (சொல்), செயல் மற்றும் (நிய்யத்) நோக்கம்; என்பனவாகும். இந்த ஹதீஸின் ஊடாக நபியவர்கள், பொய் சொல்வதன் மூலம் பேச்சு நாசப்படுத்தப்படுகிறது, துரோகத்தால் செயல் நாசப்படுத்தப்படுகிறது, வாக்குறுதியை மீறுவதன் மூலம் நோக்கம் சிதைக்கப்படுகிறது. ஏனென்றால், வாக்குறுதியை மீறுவதானது அதனுடன் சேர்ந்து அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லாவிட்டால் அது எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது. இருப்பினும், ஒரு நபர் வாக்குறுதியில் உறுதியாக இருந்து, பின்னர் ஏதாவது அவருக்குத் தடையாக இருந்தால் அல்லது அவருக்கு ஒரு புதிய கருத்து தோன்றினால், அது நயவஞ்சகத்தனமாக அமையமாட்டாது.

நயவஞ்சகம், கொள்கைரீதியானது செயல்ரீதியானது என இரண்டுவகைப்படும் : கொள்கைரீதியான நயவஞ்சகம் என்பது உள்ளே இறைநிராகரிப்கை (குப்ரை) மறைத்து முஸ்லிமாக தன்னைக் வெளியில் காட்டுவதாகும் இது ஒருவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும். செயல்ரீதியான நயவஞ்சகம் என்பது நயவஞ்சகர்களை அவர்களின் பண்பாட்டில் பின்பற்றுவதாகும். இது அந்நபரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாது, மாறாக இது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.

ஒருவர் தனது உள்ளத்தாலும் நாவினாலும் உண்மைப்படுத்தி அல்லாஹ்வை உறுதியான முறையில் விசுவாசித்த ஒருவர் இப்பண்புகளை செய்வாராயின்; அவர் காபிர் எனத் தீர்பபளிக்கப்படமாட்டார் என்றும் அவர் நிரந்தர நரகத்திற்குரிய ஒரு முனாபிக்குமல்ல என அறிஞர்கள் ஏகோபித்த கருத்தை கொண்டிருப்பதாக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்.

இமாம் நவவி குறிப்பிடுகையில் : இங்கு முனாபிகூன்கள் -நயவஞ்கர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டோர் நபியவர்களின் காலத்தில் இருந்த நயவஞ்சகர்கள். அவர்கள் தங்கள் ஈமான்; பற்றிப் பேசினார்கள், ஆனால் பொய் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய மார்க்கத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாத கூறினார்கள் , ஆனால் அதில் மோசடி செய்தார்கள், மார்க்கம் மற்றும் அதன் ஆதரவு வழங்குவது குறித்து வாக்குறுதிகளை அளித்தார்கள், ஆனால் அவற்றை மீறினார்கள், மேலும் அவர்கள் தங்கள் தகராறுகளில் ஒழுக்கக்கேடானவர்களாக இருந்தனர். என்ற அறிஞர்களின் ஒரு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

التصنيفات

நயவஞ்சகம், பாவங்களைக் கண்டித்தல், தடைசெய்யப்பட்ட வார்த்தைகளும் நாவின் விபரீதங்களும்