நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து…

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்

அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மல் வந்தால் தனது கையினாலோ அல்லது தனது ஆடையாலோ தம் வாயின் மீது வைத்து சப்தத்தை குறைத்துக்கொள்பவராக இருந்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي وأحمد]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தும்மும் போது பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள் : முதலாவது: வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு தனது கையை அல்லது தனது ஆடையை வாயின் மீது வைத்துக்கொள்வார்கள். இரண்டாவது: சப்பதம் உயராது குறைத்துக் கொள்வார்கள்.

فوائد الحديث

தும்மலின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் தெளிவு படுத்தப்படுட்டுள்ளமை இதனை முன்மாதிரியாகக் கொண்டு நடந்து கொள்ளுதல்.

வாயிலிருந்தோ அல்லது தனது மூக்குத்துவராத்திலிருந்தோ தனக்கு அருகாமையில் உள்ளவரை தொந்தரவு படுத்துவிதமாக ஏதாவது வெளிவராதாவாறு துணியை அல்லது கைகுட்டையை அல்லது அது போன்ற ஒன்றை வாயின் மீது வைத்து மூடிக்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும்.

தும்மும் போது சப்தத்தைக் குறைப்பது அவசியமாகும் அவ்வாறு செய்வது சிறந்த பண்படாகவும் ஒழுக்கம் நிறைந்த அம்சமாகவும் உள்ளது.

التصنيفات

தும்மல் மற்றும் கொட்டாவியின் ஒழுங்குகள், நபியவர்களின் நேரக வர்ணனை