நீங்கள் கூறிய படி நீங்கள் இருப்பீர்களாயின்,அது நீங்கள் அவர்களுக்குச் சுடு சாம்பல் தின்னக் கொடுத்தது…

நீங்கள் கூறிய படி நீங்கள் இருப்பீர்களாயின்,அது நீங்கள் அவர்களுக்குச் சுடு சாம்பல் தின்னக் கொடுத்தது போன்றாகும்.மேலும் நீங்கள் அப்படி இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் விடமிருந்து அவர்களுக்கு எதிராக உங்களுடன் ஒரு உதவியாளர் இருப்பார்.

ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் எனக்கு சில உரவினர்கள் இருக்கின்றனர் நான் அவர்களுடன் சேர்ந்து நடக்கின்றேன்.அவர்களோ என்னைவிட்டும் பிரிந்து போகிறார்கள்.நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன்.அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர்.இன்னும் அவர்கள் விடயத்தில் நான் பொருமையாக இருக்கின்றேன்.அவர்களோ எனக்குக் கேடு விளைவிக்கின்றனர்.என்று கூறினார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் கூறிய படி நீங்கள் இருப்பீர்களாயின்,அது நீங்கள் அவர்களுக்குச் சுடு சாம்பல் தின்னக் கொடுத்தது போன்றதாகும்.மேலும் நீங்கள் அப்படி இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் விடமிருந்து அவர்களுக்கு எதிராக உங்களுடன் ஒரு உதவியாளர் இருப்பார்"என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் " எனக்கு சில உரவினர்கள் இருக்கின்றனர் நான் அவர்களுடன் சேர்ந்து நடக்கின்றேன்.அவர்களோ என்னைவிட்டும் பிரிந்து போகிறார்கள்.நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன்.அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர்.இன்னும் அவர்கள் விடயத்தில் நான் பொருமையாக இருக்கின்றேன்.அவர்களோ எனக்குக் கேடு விளைவிக்கின்றனர்" எனவே அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றார் அதற்கு நபியவர்கள் நீங்கள் கூறிய படி நீங்கள் இருப்பீர்களாயின்,அது நீங்கள் அவர்களுக்குச் சுடு சாம்பல் தின்னக் கொடுத்தது போன்றதாகும்.ன் "மேலும் இதே நிலையில் நீங்கள் இருப்பீர்களாயின் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுடன் ஒரு உதவியாளர் இருந்து வருவார் என்றும் கூறினார்கள்,என அபூ ஹுரைரா.(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் المل என்பதன் பொருள் சுடு சாம்பல் என்பதாகும்.மேலும் تسفهم என்பதன் பொருள் அதனை அவர்களின் வாயில் போடுகின்றீர்கள் என்பதாகும்.இது இந்த மனிதன் அவர்களை விட வெற்றியடைவார் என்பதை உணர்த்தும் ஒரு சிலேடை வாசகமாகும்.மேலும் பந்துக்களுக்கு உதவி செய்தவன் அதன் பிரதி பலனை அவர்களிடமிருந்து அடைந்து கொள்வானாகில் அவன் வாஸ்த்துவத்தில் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனல்ல.உண்மையில் பந்துக்களுடன் சேர்ந்து நடப்பவன் யாரெனில் பந்துக்கள் அவனுடன் பிரிந்து சென்றாலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பவனே.ஆகையால் தனது பந்துக்களும்,அயலவர்களும்,தோழர்களும்,ஏனையவர்களும் தனக்கு இழைக்கும் தொல்லைகளை பொருமையுடன் ஏற்றுக் கொள்வது மனிதனின் கடமையாகும்.அவன் அப்படி நடந்து கொண்டால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு எதிராக அவனுடன் ஒரு உதவியாளர் இருப்பார்.எனவே அது அவருக்கு இலாபமாகவும்,அவருக்கு எதிரானவர்களுக்கு நஷ்ட்டமாகவும் அமையும்,என்பதை இந்நபி மொழி எடுத்துரைக்கிறது,எனவே இகபரத்தின் சீரும் சிறப்பும் எதிலெல்லாம் இருக்கின்றதோ அதனை அல்லாஹ் நமக்கு அனுகூலமாக்கித் தந்தருள்வானாக.

التصنيفات

குடும்ப உறவைச் சேர்ந்து நடப்பதன் சிறப்பு