إعدادات العرض
இஸ்லாம் ஆதரவற்றதாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, ஆதரவற்ற நிலைக்கே அது இறுதியில் சென்றடையும்.…
இஸ்லாம் ஆதரவற்றதாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, ஆதரவற்ற நிலைக்கே அது இறுதியில் சென்றடையும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இஸ்லாம் ஆதரவற்றதாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, ஆதரவற்ற நிலைக்கே அது இறுதியில் சென்றடையும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
الترجمة
العربية Tiếng Việt অসমীয়া Nederlands Indonesia Kiswahili Hausa සිංහල English ગુજરાતી Magyar ქართული Română Русский Português ไทย తెలుగు मराठी دری Türkçe አማርኛ বাংলা Kurdî Malagasy Македонски Tagalog ភាសាខ្មែរ Українська ਪੰਜਾਬੀ پښتو Moore Wolof മലയാളം हिन्दी Svenska Bosanskiالشرح
இங்கு நபியவர்கள் கூறுவதாவது, இஸ்லாம் சில தனிநபர்கள் மாத்திரம் இருக்க, ஏற்றுக் கொண்டவர்கள் குறைவாக இருக்கும் நிலையில் ஆதரவற்ற ஒன்றாகவே ஆரம்பித்தது. அவ்வாறு ஆரம்பித்தது போன்றே, நடைமுறைப் படுத்துபவர்கள் குறைவடைந்து, ஆதரவற்ற நிலைக்கே அது மீண்டும் செல்லும். ஆதரவற்ற நிலையிலும் அதை நடைமுறைப்படுத்தும் 'குரபா'க்களுக்கு சுபசோபனமும், மகிழ்ச்சியும், கண்குளிர்ச்சியும் உண்டாகட்டும்.فوائد الحديث
இஸ்லாம் பரவி, பிரபல்யமடைந்த பின்னரும், அந்நியப்பட்ட நிலையை அடையும் என்பதை அறிவித்தல்.
இதில் நபித்துவ அடையாளங்களில் ஒரு அடையாளம் உள்ளது. அதாவது, நபியவர்கள் தமக்கு பின்னர் நடக்கும் ஒன்றைப் பற்றிக் கூறினார்கள். அவர்கள் கூறிய பிரகாரமே நடந்துள்ளது.
இஸ்லாத்திற்காக தனது நாட்டையும், குடும்பத்தையும் விட்டுச் செல்வதன் சிறப்பு. மேலும் அவருக்கு சுவனம் உள்ளமை.
குரபா என்போர், மக்கள் சீர்கெட்டுச் செல்லும் போது சீர்த்திருத்துபவர்கள். அதாவது, மக்கள் சீர்க்கெடுத்துள்ளவற்றை சீர்த்திருத்துபவர்களாகும்.
التصنيفات
நல்லோர்களின் நிலைகள்