(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்

(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

விதவைப் பெண் மற்றும் தேவையுள்ள ஏழைகளின் விடயத்தில் கவனமெடுத்து செயல்படுபவர் கூலி கிடைப்பதில் இறைபாதையில் போரிடுபவர், தொடர்ச்சியான இராவணக்கத்தின் காரணமாக சோர்வடையாது நின்று வணங்குபவர், தொடர்ந்து நோன்பு நோற்பவர் போன்றாவார் என நபியவர்கள் இந்நபிமொழியில் அறிவித்துள்ளார்கள்.

فوائد الحديث

விதவை, ஏழைகளைப் பராமரிப்பவரை போராளி, இரவு வணக்கத்தில் ஈடுபடுபவருடன் இணைத்துப் பார்ப்பதற்கான காரணம் இது போன்ற நற்செயல்களில் தொடர்ந்து நிலைத்திருக்க மனப்போராட்டம், ஷைத்தானுடனான போராட்டம் தேவைப்படுகின்றது என்பதற்காகத் தான்.

பலவீனமானவர்களின் வேதனையை நீக்கவும், அவர்களின் மனஆறுதல், தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் புனிதத்தை பாதுகாக்கவும் இந்நபிமொழி தூண்டுகிறது.

இஸ்லாமிய கட்டுமானம் உறுதியாவதற்காக முஸ்லிம்களின் ஒற்றுமை, சேர்ந்து வாழ்தல் மற்றும் ஒத்துழைப்பில் இஸ்லாமிய ஷரீஆவின் ஆர்வம் இங்கு காணப்படுகின்றது.

வணக்கம் என்பது அனைத்து நல்ல செயல்களையும் உள்ளடக்குகின்றது.

வணக்கம் என்பது : அல்லாஹ் விரும்பி, பொருந்திக் கொள்ளக் கூடிய உள்ரங்கமான, வெளிப்படையான அனைத்து செயல்களுக்குமான ஒரு பொதுப்பெயராகும்.

التصنيفات

உடல் செயற்பாடுகளின் சிறப்புகள், உடல் செயற்பாடுகளின் சிறப்புகள்