ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து…

ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "ஐவேளை தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை, ஒரு ரமழான் முதல் அடுத்த ரமழான் வரை பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது.".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஐவேளை தொழுகையும் அவற்றுக்கிடையிலுள்ள சிறுபாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்து விடுகிறது. பெரும் பாவங்களுக்கு அது குற்றப்பரிகாரமாக ஆகுவதில்லை. அவ்வாறே ஜும்ஆத் தொழுகையும் அதையடுத்து வரும் ஜும்ஆவுக் கிடையிலுள்ளவைகளும் ரமழான் நோன்பு அடுத்த ரமழான் வரையும் பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம் (சிறு) பாவங்களுக்கு குற்றப்பரிகாரமாக அமைந்துவிடுகிறது.

فوائد الحديث

மேற்கண்ட கடமைகளைச் சரிவரச் செய்வது அவற்றுக்கு இடையே ஏற்பட்ட பாவங்களை அல்லாஹ் தனது கருணை, சிறப்பின் மூலம் மன்னிப்பதற்குக் காரணமாகின்றது.

பாவங்கள் பெரியவை, சிறியவை என இரு வகைப்படுகின்றன.

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், நல்லமல்களின் சிறப்புகள், தொழுகையின் சிறப்பு