((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம்…

((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சில ஒழுக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது மறையுறுப்பை வலது கையால் பிடிப்பதையும்,முன்பின் துவாரங்களில் உள்ள அசுத்தத்தை வலது கையினால் நீக்குவதையும் தடை செய்துள்ளார்கள்.ஏனெனில்; வலது கை நல்ல விடயங்களில் பயன்படுத்துவதற்குரறியது என்பதினாலாகும். அதே போன்று குடிக்கும் பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும் தடைசெய்துள்ளார்கள்

فوائد الحديث

ஒழுக்கங்கள் மற்றும் சுத்தம் போன்றவற்றில் இஸ்லாம் முன்னிலையில் காணப்படுகின்றமை.

அசுத்தமான பொருட்களை தொடுவதை விட்டு விலகியிருத்தல்,ஆனால் கட்டாயம் தொடவேண்டிய தேவையிருந்தால் அதற்கு அவர் இடது கையைப் பயன்படுத்தத்தட்டும்;.

வலது கையின் மேன்மையும் இடது கையை விடவும் அது சிறப்புப்பெற்றுள்ளமை தொடர்பான விபரமும்.

இஸ்லாமிய ஷரீஆவின் முழுமைத்துவமும் அதன் போதனைகளின் விரிவானதன்மையும்.

التصنيفات

உண்ணல், குடித்தலின் ஒழுங்குகள், இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள்