ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.…

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தான் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தான் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்''.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று தினங்களுக்கு மேல் வெறுத்து, ஒருவர் மற்றவரை சந்தித்தும் ஸலாம் கூறாமல், கதைக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. மனித இயல்பைக் கருத்திற் கொண்டு மூன்று நாட்கள், அதை விடக் குறைந்த நாட்கள் வெறுத்திருக்க முடியும் என்பதே இதிலிருந்து விளங்கப்படுகின்றது. ஏனெனில் மனிதன் கோபம், மற்றும் தீய குணங்குளுடனேயே படைக்கப்பட்டுள்ளான். எனவே அதை தீர்த்துக் கொள்ள மூன்று நாட்கள் அவனுக்கு மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ள பகை மனிதனின் சுய விவகாரங்களுக்காக பகைப்பதையே நாடப்பட்டுள்ளது. பாவிகள், பித்அத்வாதிகள், கெட்ட தோழர்கள் போன்றோரை அல்லாஹ்விற்காகப் பகைப்பதில் காலவரையறை இல்லை. அவர்களது தீமை நீங்குவதுடன் தான் அது தொடர்புபட்டுள்ளது. பிணங்கிக் கொள்ளும் இவ்விருவரில் வெறுப்பைப் போக்கி, முதலில் ஸலாம் கூறுபவரே சிறந்தவராவார்.

فوائد الحديث

உலக விவகாரங்களுக்காக ஒரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது ஹராமாகும்.

முதலில் ஸலாம் கூறி தமக்கிடையே உள்ள வெறுப்பு, பகையை நீக்குபவரின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது.

ஸலாம் கூறுவதன் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது, இது உள்ளத்தில் இருக்கும் கசடுகளை போக்குவதுடன், நேசத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது.

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், புறக்கணித்தலும் அதன் நிபந்தனைனகளும், ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்