"ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும்…

"ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார் : "ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி, புகழ்ந்து, புனிதப்படுத்தி, ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனை நினைவுகூர்வதை இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது. இந்த திக்ருகள் இவ்வுலகம், அதிலுள்ளவற்றை விட சிறந்தது, ஏனெனில் இவை மறுமையின் செயல்களாகும், அவைதான் நிலையான நல்லறங்கள், அதன் நன்மை நீங்காது, கூலி நின்று விட மாட்டாது, அதே வேளை இவ்வுலகமோ அழிவை நோக்கிச் செல்லக் கூடியதாகும்.

فوائد الحديث

அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தி, புகழ்ந்து, புனிதப்படுத்தி, ஒருமைப்படுத்தி, பெருமைப்படுத்தி அவனை நினைவுகூர்வதை இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.

"ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" ஆகியன நிலையான நல்லறங்களாகும்.

இவ்வுலக பொருட்கள் குறைவானது, அதன் இன்பங்கள் நிலையற்றது.

மறுமையின் இன்பங்கள் நிலையானது, நீங்காதது.

التصنيفات

பொதுவான திக்ருகள்