(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும்…

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும்

நபி ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். தேடிச் செல்லாதீர்கள் ஒருவருக்கொருவார் பொறாமை கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், கோபித்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற வகையில் சகோதரர்களாக இருங்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பகைமை மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கும் விடயங்கள்; சிலவற்றை எச்சரித்து தடைசெய்துள்ளார்கள். அவற்றுள் பின்வருன ஹதீஸில் குறிப்பிடப்பட்டவையாகும் (அழ்ழன்)'ஊகம், பழிசுமத்துதல் என்பது இதன் கருத்தாகும் அதாவது எவ்வித ஆதாரமுமின்றி ஊகத்தின் அடிப்படையில் உள்ளத்தில் எழும் பிறர் குறித்த தீய எண்ணம் (பழியுரைத்தல்). இதனை நபியவர்கள் பேச்சுகளில் மிகப்பெரும் பொய் என தெளிவுபடுத்துகிறார்கள். (அத்தஹஸ்ஸுஸ்) மனிதர்களின் குறைகளை நேரடியாக பார்த்தல்; அல்லது கேட்டல் ஊடாக தேடிச் செல்வதை குறிக்கும். (அத்தஜஸ்ஸுஸ்) மனிதர்களின் தெரியாத மறைவான விடயங்களை தேடிச்செல்லுதல், ஆய்வுசெய்தல். இவ்வார்த்தை அதிகம் தீமை சார்ந்த விடயங்களில் பிரயோகிக்கப்படும். (அல் ஹஸத்) : பிறருக்கு கிடைத்த அருள்களை விரும்பாதிருத்தல்,(வெறுத்தல்). (அத்ததாபுர்) என்பது ஒருவறை புறக்கணித்து பிணங்கிக் கொள்வது இதனால் தனது சகோதர முஸ்லிமுக்கு ஸலாம் கூறாதிருப்பது அவரை சந்திக்காது இருத்தல். (அத்தபாகுழ்) என்பது வெறுத்தல் ஓதுக்குதல் என்ற கருத்தைக்குறிக்கும் அதாவது பிறருக்கு நோவினை செய்தல் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொள்ளுதல்,வெறுப்போடு சந்தித்தல் என்பவை இதன் கருத்தாகும். இறுதியாக முஸ்லிம்களின் நிலைகளை சீர்செய்யும் முகமாகவும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்காகவும் வேண்டி கருத்தாளமிக்க ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்கள். அதுதான் 'நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்றவகையில் சகோதரர்களாக இருங்கள்';. சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கு மத்தியில் உறவை, தொடர்பை பலப்படுத்தும் ஒரு இணைப்பாகும். அது அவர்களுக்கு மத்தியில் அன்பையும் நேசத்தையும் அதிகப்படுத்துகிறது.

فوائد الحديث

யாரிடம் தீய எண்ணங்கள் பற்றிய அறிகுறிகள் தென்படுகிறதோ அவரைப்பற்றித் தப்பான எண்ணம் கொள்வதில் பிரச்சினை கிடையாது. ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை விவேகமுள்ளவனாகவும், புத்திசாதுரியம் மிக்கவராகவும் இருப்பதோடு, பாவிகள் மற்றும் தீயவர்கள் விடயத்தில் ஏமாந்திடலாகாது.

இங்கே பிறர்பற்றி பழிசுமத்துதல் தீய எண்ணங் கொள்வது என்பற்கான எச்சரிக்கையானது உள்ளத்தில் ஆழமாக நினைத்து அதில் விடாப் பிடியாக இருத்தலைக் குறிக்கும். மாறாக உள்ளத்தில் ஒருவரை ப்பற்றி சாதாரணமாக வந்து போகும் எண்ணங்களைக் குறிக்காது.

முஸ்லிம் சமூகத்தில் உள்ள தனிநபர்களுக்கிடையி ல் உறவைத்துண்டாடி வெறுப்பை தூண்டுவதற்கு காரணமாக காணப்படுகின்ற மற்றவர் குறையை ஆராய்தல், பொறாமைப்படுதல் போன்ற விடயங்கள் ஹராமாக்கப்பட்டிருத்தல்.

நலன் நாடுவதிலும் நேசம் கொள்வதிலும் ஒரு முஸ்லிமுடன் சகோதரத் தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்திருத்தல்.

التصنيفات

தீய குணங்கள்