(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'

(ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஆண்களில்) யார் இம்மையில் பட்(டா)டை அணிகிறாரோ அவர் மறுமையில் அதை அணிய மாட்டார்'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இவ்வுலகில் ஆண்களில் பட்டாடை அணிபவர் மறுமையில் அதனை அணியமாட்டார் என இந்த ஹதீஸில் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். ஒருவர் பட்டாடை அணிந்து அதற்காக தௌபா –பாவமீட்சி கோராது விட்டால் அவறுக்கான மறுமையின் தண்டனை இதுவாகும்.

فوائد الحديث

இங்கு பட்டாடை என்பது இயற்கையான தூய்மையான பட்டையே குறிக்கிறது செயற்கை பட்டை குறிக்காது.

ஆண்கள் பட்டாடை அணிவது ஹராமாகும்

பட்டாடை அணிதல் தடுக்கப்பட்டிருத்தல் என்பது அதனை ஆடையாக, விரிப்பாக பயன்படுத்துவதனையும் உள்ளடக்கும்.

ஆண்கள் தங்கள் ஆடைகளில் இரண்டு அல்லது நான்கு விரல்கள் அளவுக்கு அகலமான பட்டுத் துணியை மாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்கள், அதை ஆடையின் குறியீடாகவோ அல்லது ஆடையின் ஒரத்திற்கு அலங்காரமாகவோ பயன்படுத்தலாம்.

التصنيفات

ஆடை ஒழுக்கங்கள்