'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்:…

'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக உள்ளான் என 10

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக உள்ளான் என 10 தடவைகள் கூறினால் அவர் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' என்பதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியவானவன் வேறு யாரும் கிடையாது. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவன் மாத்திரமே முழுமையான ஆட்சி அதிகாரகத்துக்கு உரித்துடையவன். அத்துடன் ஏனையோரைத் தவிர்த்து நேசம்கொள்ளுதல் மற்றும் மகிமைப்படுத்துதல் என்ற விடயங்களுடன் பாராட்டுக்கும் புகழுக்கும் தகுதியானவன். அவன் ஆற்றல் மிக்கவன் அவனை எதனாலும் இயலாமல் செய்திட முடியாது என்பதாகும். ஆகவே இந்த மகத்தான திக்ரை யார் ஒரு நாளில் பத்து தடவைகள் கூறினால் இஸ்மாஈல் இப்னு இப்ராஹீம் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் உள்ள அடிமைகளில் நான்கு அடிமைகளை உரிமையிட்ட நன்மை அவருக்கு கிடைக்கிறது. இங்கு இஸ்மாஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சந்ததிகள் என குறிப்பிட்டு கூறக்காரணம் அவர்கள் ஏனையோரை விடவும் சிறப்புக்குரியவர்கள் என்பதினாலாகும்.

فوائد الحديث

இந்த திக்ரானது அல்லாஹ்வை -உலூஹிய்யாவில் -இறைமைத்துவத்திலும் ஆட்சி அதிகாரம் ,புகழ் மற்றும் முழுமையான ஆற்றல் ஆகியவிடயங் களிலும் தனித்துவமானவன் என்பதை உள்ளடக்கி சிறப்புப் பெற்றுள்ளது.

இந்த திக்ரை ஒரே நேரத்தில் தொடராகவோ அல்லது விட்டுவிட்டோ கூறினாலும் இந்த திக்ரை ஒதியதற்கான கூலி கிடைக்கும்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்