உணவு சாப்பிட்டதுவும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ்…

உணவு சாப்பிட்டதுவும், அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்கள் : "உணவு சாப்பிட்டதுவும்,அல்லது பானம் அருந்தியதும் அதன் நிமித்தம் தனக்கு நன்றி செலுத்தும் அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

உணவளிப்பவன் அல்லாஹ் ஒருவனே. ஆகையால் அவனளித்த ஊண், குடிப்புக்காக நன்றி செலுத்துதல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் காரணங்களில் ஒன்றாகும்.

فوائد الحديث

பொருந்திக் கொள்ளல் எனும் பண்பு அல்லாஹ்வுக்குண்டு என்பதை உறுதிப்படுத்தல்.

உணவு, பானத்திற்குப் பின் அல்லாஹ்வைப் புகழ்வது போன்ற அற்பக் காரணத்தின் மூலம் கூட அவனது திருப்தியை அடையலாம்.

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது அவனது திருப்தியை அடையும் காரணமாதலால் அதனை ஊக்குவித்துள்ளது, அவ்வாறு நன்றி செலுத்துவது வெற்றிக்கும், செயல்கள் ஏற்கப்படவும் காரணமாகும்.

உணவு உட்கொள்வதன் ஒழுக்கங்களில் ஒன்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தயாளத் தன்மை இங்கு தெளிவுபடுத்தப் பட்டுள்ளது, அவனே உமக்கு வாழ்வாதரம் அளித்து விட்டு, பின் அவனைப் புகழும் போது அவனே உம்மைப் பொருந்திக் கொள்கின்றான்.

"அல்ஹம்து லில்லாஹ்" (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) எனும் வார்த்தையை உளப்பூர்வமாகக் கூறுவதன் மூலம் இந்த ஸுன்னா உருவாகிவிடும்.

التصنيفات

உண்ணல், குடித்தலின் ஒழுங்குகள்