பெரும் பாவங்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல்,பொய் சத்தியம் பண்ணுதல்.

பெரும் பாவங்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல்,பொய் சத்தியம் பண்ணுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பெரும் பாவங்கள்: அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல்,பொய் சத்தியம் பண்ணுதல்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

இந்த ஹதீஸ் பல பாவங்களை எடுத்துக் கூறி அதனை பெரும் பாவங்கள் என அடையாளமிட்டும் உள்ளது. அதன் மூலம் அவற்றை செய்கின்றவனுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் இம்மை மறுமையில் ஏற்படக்கூடிய பாரிய கெடுதிகளின் காரணமாகவே அவ்வாறு பெயர் கூறப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வுக்கு இணைவைத்தல். அதாவது அல்லாஹ்வோடு வேறொருவரை சேர்த்து வணங்குதல், தன் இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை மறுத்தல் முதலியன மூலம் அல்லாஹ்வை நிராகரித்தல். 2. பெற்றோரை துன்புறுத்தல். அதன் உண்மை யாதெனில் அவ்விருவரையும் அல்லது இருவரில் ஒருவரை அவர்கள் வருத்தப்படும் வண்ணம் ஒன்றை செய்வதாகும். உதாரணமாக அவர்கள் இருவரையும் மரியாதைப் படுத்தாது இருத்தல். ஏசுதல் அவர்களுக்காக எழுந்து நிற்காதிருத்தல் அவ்விருவரும் தம் பிள்ளைகளின் பால் தேவையுறும் நேரங்களில் அப்பிள்ளைகள் அத்தேவையை செய்யாமலிருத்தல். 3. கொலை செய்தல் என்பது எந்த உரிமையுமின்றி அநியாயமாக அத்துமீறி கொலை செய்தலாகும். கொலை குற்றத்திற்காக ஒரு மனிதன் கொலை தண்டனையை பெறுவதற்குரியவனாயின் அது இந்த ஹதீஸில் சேரமாட்டாது. இறுதியாக இந்த ஹதீஸ் பொய்ச்சத்தியத்தை கூறி அச்சமூட்டுகிறது. பொய்ச்சத்தியம் என்ற வார்த்தையைக் கூறி அரபியிலே அல்(g)கமூஸ் என்று கூறப்பட்டுள்ளது அதன் பொருளாவது மூழ்குதல் என்பதாகும். எனவே ஒருவன் உண்மையை அறிந்த நிலையில் பொய்யாக சத்தியம் செய்வதன் மூலம் பாவத்திலோ அல்லது நரகிலோ மூழ்குவதனால் இப்பெயர் கூறப்பட்டுள்ளது.

فوائد الحديث

இது போன்ற பாவங்களில் வீழ்ந்திடாமல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இவை பெரிய பாவங்களிலுள்ளவையாகும்.

சத்தியம் பல வகைப்படும் : நரகில் மூழ்கடிக்கக் கூடிய பொய்ச் சத்தியம் அதில் ஒரு வகையாகும், ஒன்றைச் செய்வதாகவோ, விடுவதாகவோ செய்யக்கூடிய செல்லுபடியாகக் கூடிய சத்தியமும் உண்டு, இந்த சத்தியத்தியத்திற்கு மாற்றமாக நடந்தால் பரிகாரம் கொடுக்க வேண்டும், உண்மையாக சத்தியத்தியத்தை நாடாமல் வெறும் வாய்ப்பேச்சில் வரும் வீண் சத்தியம் மற்றுமொரு வகையாகும். உரையாடும் போது அரபு மக்களின் நாவிலிருந்து அடிக்கடி வெளிப்படும் "வல்லாஹி" (அல்லாஹ்வின் மீது சத்தியமாக!) எனும் வார்த்தைப் பிரயோகத்தை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இந்நபிமொழியில் இந்நான்குடன் மாத்திரம் சுருக்கிக் கொண்டிருப்பது பாவத்தால் இவை பாரியவை, குற்றத்தால் கடுமையானது என்பதற்காகவே தவிர இந்த நான்குடன் மட்டுப்படுத்துவது நோக்கமல்ல.

التصنيفات

பாவங்களைக் கண்டித்தல்