ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!"…

ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்: "ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்" என்று சொல்கிறான்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஓர் அடியான் ஒரு பாவத்தை செய்து விட்டு, இறைவா எனது பாவத்தை மன்னித்து விடு எனக் கோரினால் அல்லாஹ் கூறுகின்றான் எனது அடியான் ஒரு பாவத்தை செய்து விட்டான், பாவங்களை மன்னித்து, மறைக்கும், அதற்காகத் தண்டிக்கும் ஓர் இரட்சகன் தனக்கிருப்பதாக அறிந்து வைத்துள்ளான் எனக் கூறுகின்றான். பின்னரும் ஒரு பாவத்தை செய்து விட்டு, இறைவா எனது பாவத்தை மன்னித்து விடு எனக் கோரினால் அல்லாஹ் கூறுகின்றான் எனது அடியான் ஒரு பாவத்தை செய்து விட்டான், பாவங்களை மன்னித்து, மறைக்கும், அதற்காகத் தண்டிக்கும் ஓர் இரட்சகன் தனக்கிருப்பதாக அறிந்து வைத்துள்ளான், எனது அடியானை நான் மன்னித்து விட்டேன், அவன் விரும்பிய பாவத்தைச் செய்து, அதனைத் தொடர்ந்து முறையான பாவமீட்சியை செய்து கொள்ளட்டும், இவ்வாறு பாவம் செய்து விட்டு முறையாக மன்னிப்புக் கோரும் போதெல்லாம் நான் அவனை மன்னிக்கின்றேன், ஏனெனில் (தவ்பா) பாவமீட்சி அதற்கு முன்னுள்ள பாவங்களை அழித்து விடுகின்றது எனக் கூறுகின்றான்.

فوائد الحديث

அல்லாஹ்வின் மகத்தான சிறப்பும் கருணையும் இங்கு தெளிவாகின்றது, அடியார்கள் அவர்களது கடிவாளங்கள் தமது இரட்சகனிடம்தான் உள்ளன, அவன் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான் என நம்பிக்கை கொள்ளும் காலமெல்லாம் அவன் தனது அடியார்களுக்குக் கருணை காட்டுகின்றான்.

முறையான தவ்பா பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும்.

அல்லாஹ்வை நம்பியவனின் இதயம் தவ்பா மூலம் தெளிவடைந்து, தனது இரட்சகனின் மன்னிப்பை ஆதரவு வைக்கின்றது, எனவே சீர்திருந்தி, நல்லசெயலின்பால் விரைவது அவசியமாகும், தன்னிடமிருந்து பாவமேதும் நிகழ்ந்தாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு தவ்பாச் செய்து, பாவத்தில் தொடர்ந்திருக்காமல் இருக்க வேண்டும்.

ஓர் அடியானிடமிருந்து நூற்றுக்கு மேற்பட்டளவு பாவங்கள் நிகழ்ந்து, ஒவ்வொரு தடவை தவ்பாச் செய்தாலும் அவருடைய தவ்பா ஏற்கப்பட்டு பாவங்கள் வீழ்ந்திடும். அனைத்து பாவங்களுக்குமாக ஒரே தடவையில் தவ்பாச் செய்தாலும் அவருடைய தவ்பாவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்