'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''

'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : 'இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள்''.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் மரணித்தோரை ஏசுவதும், அவர்களை மானபங்கப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டது என்பதுடன், அது கெட்ட குணங்களில் ஒன்றாகும் என்றும் தெளிவு படுத்துகிறார்கள். நற்காரியங்கள் அல்லது தீயகாரியங்ளை செய்தவர்களாக இறைவனிடம் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களை ஏசுவதால் அந்த ஏச்சுப்பேச்சுகள் அவர்களை சென்றடைவதில்லை, மாறாக உயிர் வாழும் அவர்களின் உறவுகளையே அது பாதிக்கிறது.

فوائد الحديث

இந்த ஹதீஸ் மரணித்தோரை ஏசுவது-குறைகூறுவது- ஹராம் என்பதற்கான ஓர் ஆதாரமாகும்.

மரணித்தோரை ஏசுவது மற்றும் குறைகூறுவதை தவிர்ப்பதில் உயிரோடு இருப்போரது நலன் தங்கியிருப்பதோடு, குரோதம் வெறுப்பு போன்றவற்றிலிருந்து சமூகத்தின் சீர்மை பேணப்படுதல்.

மரணித்தோரை ஏசுவது தடுக்கப்பட்டிருத்தலின் பின் உள்ள நுட்பம் யாதெனில் அவர்கள் செய்த நன்மை, தீமைகளை அவர்கள் கொண்டு சென்று விட்டார்கள், பின்னால் வந்தோரின் ஏசுதல், குறை கூறல் அவர்களுக்கு எப்பயனையும் அளிக்காது, அவ்வாறு அவர்களை குறைகூறுவதினாலும் ஏசுவதினாலும் உயிரோடுள்ள அவர்களின் உறவினர்களை தான் பாதிப்பதுடன் அவர்களுக்கு நோவினையாகவும் அமைந்துவிடும்.

எவ்வித நலனுமற்ற விடயங்களை மனிதன் பேசுவது ஆகாது.

التصنيفات

சிறப்புக்களும் ஒழுக்கங்களும், மரணமும் அதன் சட்டதிட்டங்களும்