'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம்…

'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுத்தம்- வுழுவின் சட்டங்களின் சிலவற்றை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவை பின்வருமாறு: முதலாவது: வுழு செய்யும் ஒருவர் நாசுக்கு நீர் செலுத்தி அதனை சிந்த வேண்டும். இரண்டாவது: சிறுநீர் கழித்த ஒருவர் அதனை நீர் அல்லாத கல் அல்லது அதன் நிலையிலுள்ள பொருட்களால் சுத்தம் செய்து, நீக்கிவிட நாடினால் அதனை ஒற்றைப்படையாக செய்ய வேண்டும். அதன் குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்றாகும். மூன்றாவது : இரவுத் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர் தனது இரு கைகளையும் பாத்திரத்திற்குள் இட முன் மூன்று தடவைகள் கழுவிக்கொள்ளல் வேண்டும். ஏனென்றால் அவர் இரவில் தூங்குகையில் அவரின் கை எவற்வையெல்லாம் தொட்டது என்பது பற்றி அவருக்கு தெரியாது. ஆகவே அசுத்தம் அவற்றில் பட்டிருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. சில வேளை ஷைத்தான் அவனைக் குழப்பி மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது நீரை மாசுபடுத்தக்கூடியவைகளை கொண்டு வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

فوائد الحديث

வுழுவின் போது நாசுக்கு நீர் செலுத்தி அதனை சிந்துவது வாஜிபாகும். அதாவது நீரை மூச்சின் மூலம் நாசுக்குள் செலுத்தி மூச்சின் மூலம் அதனை வெளியே சிந்துவதையும் இது குறிக்கும்.

ஓற்றைப்படையாக கல்வைத்து சுத்தம் செய்வது விரும்பத்தக்கதாகும்.

இரவுத் தூக்த்திலிருந்து விழித்தபின் இரு கைகளையும் மூன்று தடவைகள் கழுவுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும்.

التصنيفات

இயற்கை தேவைகள் நிறைவேற்றுவதன் ஒழுங்குகள், வுழூ, தூக்கம் மற்றும் விழித்தலின் ஒழுங்குகள்