'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நற் செயல்கள் அனைத்தும் தர்மமாகும்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

பிறருக்கு செய்யும் உபகாரமும், பயன்படத்தக்க ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தர்மமாகும், அதற்கு கூலியும், வெகுமதியும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

தர்மம் என்பது மனிதன் தன்னிடமிருந்து வழங்கும் செல்வத்துடன் மாத்திரம் வரையறுக்கப்பட்டதன்று. மாறாக மனிதன் செய்யும் நற்செயல்கள் மற்றும் அவன் பேசும் வார்த்தைகள் மற்றும் பிறர் பயனடையவதற்கு சேர்ப்பிக்கும் அனைத்து சேவைகளையும் குறிக்கும்.

நற்செயல், மற்றும் பிறருக்கு பயனளிக்கும் அனைத்தையும் செய்ய இந்நபிமொழி ஊக்குவிக்கின்றது.

எந்த ஒரு நற்செயலும் சிறியதாக இருந்தாலும் அதனை துச்சமாய் கருதாதிருத்தல்.

التصنيفات

நல்லமல்களின் சிறப்புகள்