யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அது…

யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அது மன்னிக்கப்பட்டு விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அது மன்னிக்கப்பட்டு விடும்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மேற்கண்ட வார்த்தை மூலம் அல்லாஹ்வை துதிக்கும் இந்த திக்ருடைய சிறப்பிற்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. இதனைக் கூறியவரின் பாவங்கள் கடல் நுரையளவு அதிகமாக இருந்தாலும் அவற்றை அல்லாஹ் தன்னை நினைவுகூர்வோரை சிறப்பிக்கும் வரையில் மன்னிக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் பின்வரும் நபிமொழி இந்த திக்ரை காலை, மாலை இருவேளைகளிலும் கூற வேண்டும் என்பதை அறிவிக்கின்றது : "யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி"என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர". ஆதாரம் : முஸ்லிம்.

فوائد الحديث

அல்லாஹ்வைத் துதித்து, அவனுக்குத் தகுதியில்லாத, குறைகளை விட்டும் அவனைத் தூய்மையை உள்ளடக்கியுள்ள இந்த திக்ரின் சிறப்பு இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

இந்த திக்ரைத் தினமும் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ, சிலதைப் பகலிலும், சிலதை இரவிலிமோ எவ்வாறு கூறினாலும் மேற்கண்ட கூலி கிடைக்கும் என்பதையே இந்நபிமொழியிலிருந்து வெளிப்படையாக விளங்க முடிகின்றது.

"யார் கூறுகிறாரோ" என நபிமொழியில் இடம்பெற்றுள்ள வார்த்தையில் மனிதனுக்கு எவ்வித சுய தெரிவும் இல்லை, அவன் நிர்ப்பந்திக்கப்பட்டே இயங்குகின்றான் எனும் கொள்கையுடைய "ஜபரிய்யா" எனும் பிரிவினருக்கு மறுப்புள்ளது.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்