உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில்,…

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கரத்தால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கரத்தால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கரத்தால்தான் உண்கிறான்; இடக்கரத்தால்தான் பருகுகிறான்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்நபிமொழியில் வலக்கரத்தால்தான் உண்ணவும், பருகவும் வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளதுடன், இடக்கரத்தால் உண்ணவோ, பருகவோ கூடாதெனத் தடையும் வந்துள்ளது. அதற்குரிய காரணமும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது, அதுதான் ஷைத்தான் இடக்கரத்தால் உண்பதும், பருகுவதும் ஆகும். இங்கு ஏவல் கடமையைக் குறிக்கின்றது என்பதையே காட்டுகின்றது, இடக்கரத்தால் உண்பதும், பருகுவதும் ஹராமாகும். ஏனெனில் இது ஷைத்தானுடைய செயல், குணம் எனக் காரணும் கூறியுள்ளார்கள். ஷைத்தான் ஒரு புறமிருக்க பாவிகளின் வழிகளையே தவிர்க்குமாறு முஸ்லிம் ஏவப்பட்டுள்ளான். யார் பிற சமூகத்திற்கு ஒப்பாகின்றாரோ அவரும் அதே கூட்டத்தைச் சார்ந்தவராவார்.

فوائد الحديث

வலக்கரத்தால் உண்பதும், பருகுவதும் கடமையாகும், இங்கு ஏவல் கடமையைக் குறிக்கின்றது என்பதையே காட்டுகின்றது.

இடக்கரத்தால் உண்பதும், பருகுவதும் ஹராமாகும்.

ஷைத்தானுடைய செயல்களுக்கு ஒப்பாகுபவற்றைத் தவிர்ப்பது அவசியமென்பதை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது.

ஷைத்தானுக்கு இரு கரங்கள் இருப்பதையும், அவனும் உண்கின்றான், பருகுகின்றான் என்பதையும் இந்நபிமொழி அறிவிக்கின்றது.

வலதுகரத்தை மதித்தல், நாம் அதன் மூலமே உண்ணும்படி ஏவப்பட்டுள்ளோம், ஆகாரம் உடலுக்குரிய போசாக்கு என்பது அறியப்பட்ட விடயமாகும். நல்ல செயற்கள் வலக் கரத்தாலையே செய்யப்பட வேண்டும்.

இறைநிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாவது தடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஷைத்தானுக்கு ஒப்பாவதை விட்டும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம், அவன்தான் இறைநிராகரிப்பின் தலைவனாகும்.

தனது சமூகம் அறிந்திராத இந்த விடயத்தை நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்குக் கூறி உபதேசித்துள்ளார்கள்.

التصنيفات

உண்ணல், குடித்தலின் ஒழுங்குகள்