'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி…

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ''அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு நன்மைகளை அழிக்கும் ஏழு பெரும் குற்றங்களை விட்டும் தூரமாகுமாறு ஏவுகின்றார்கள். அவை பற்றிக் கேட்கப்பட்ட போது முதலில் அல்லாஹ்விற்கு எவ்விதத்திலாவது இணையாளர்களை ஏற்படுத்துவதன் மூலம் இணைவைத்தலைக் கூறித் தெளிவுபடுத்தினார்கள். அது மிகப்பெரும் பாவமாதலால் அதனை வைத்து ஆரம்பித்தார்கள். மேலும் சட்டபூர்வமான காரணமின்றிக் கொலை செய்யத் தடுக்கப்பட்ட உயிர்களைக் கொல்தல், சூனியம், உண்ணுதல், அல்லது வேறு பயனடையும் வழிகளில் வட்டி பரிவர்த்தனை மேற்கொள்ளல், அநாதையின் உடமைகளில் அத்துமீறுதல், நிராகரிப்பாளர்களுடனான போரின் போது புறமுதுகிட்டு ஓடுதல், பத்தினியான சுதந்திரமான பெண்களுக்கு விபச்சாரத்தின் மூலம் அவதூறு கூறுதல் ஆகியவற்றையும் நபியவர்கள் கூறினார்கள்.

فوائد الحديث

அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஹராமாகும், அது மிகப் பெரும் பாவமாகும்.

சூனியம் செய்வது ஹராமாகும், அது நன்மைகளை அழிக்கக்கூடிய, இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய பாவமாகும்.

உரிமையின்றி கொலை செய்வது ஹராமாகும்.

கொலைப்பழி தீர்த்தல், மதமாற்றம், சட்டபூர்வமான திருமணத்திற்குப் பின் விபச்சாரத்தில் ஈடுபடல் போன்ற காரணங்களிற்காகக் கொலை செய்யலாம்.

வட்டி ஹராமென்பதுடன் அதன் பாரிய விளைவுகளையும் இந்நநபிமொழி மூலம் புரியலாம்.

அநாதைகளின் சொத்துக்களில் அத்துமீறுதல் ஹராமாகும்.

யுத்தகளத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடுவது ஹராமாகும்.

விபச்சாரம், ஓரினச்சேர்க்கை போன்றவற்றைக் கொண்டு அவதூறு கூறுவது ஹராமாகும்.

நிராகரிப்பாளருக்கு அவதூறு கூறுவது பெரும்பாவமில்லை.

التصنيفات

தீய குணங்கள், பாவங்களைக் கண்டித்தல்