மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர் அத்தவறுகளிலிருந்து பாவமீட்சி பெறுவோராகும்.

மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர் அத்தவறுகளிலிருந்து பாவமீட்சி பெறுவோராகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர்கள் அத்தவறுகளிலிருந்து பாவமீட்சி பெறுவோராகும்".

[ஹஸனானது-சிறந்தது] [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார்]

الشرح

மனிதன் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளதாலும், தனது எஜமான் ஏவியதை எடுத்து நடப்பதிலும், விலக்கியதைத் தவிர்ந்து கொள்வதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் பாவம் செய்யாமல் அவனால் இருக்க முடியாது. எனினும் தவ்பாவின் பாவமீட்சி வாயிலை அல்லாஹ் தனது அடியார்களுக்காகத் திறந்து வைத்துள்ளான். தவறிழைப்பவர்களில் அதிகம் தவ்பாச் செய்வோரே சிறந்தவர்கள் எனவும் அவன் அறிவித்துள்ளான்.

فوائد الحديث

தவறுகளைச் செய்து பாவத்தில் விழுவது மனிதனின் இயல்பாகும். அவ்வாறு பாவம் செய்தால் உடனடியாகத் தவ்பாச் செய்வது ஒரு விசுவாசிக்குக் கடமையாகும்.

التصنيفات

பாவமீட்சி