ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை ஓரிரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமாகும்.

ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை ஓரிரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களை ஓரிரவில் ஓதினால் அதுவே அவனது பாதுகாப்பிற்குப் போதுமாகும்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஸூரா பகராவின் இறுதி இரு வசனங்களையும் இரவில் தூங்க முன் ஓதியவரை எந்தவொரு கெடுதி, தீங்கும் தொடாமல் அல்லாஹ் பாதுகாக்கின்றான் என நபியவர்கள் கூறுகின்றார்கள். இதில் வேறு கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு : இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். தூங்கும் போது ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இது போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். இந்நபிமொழியில் இடம்பெற்றுள்ள வார்த்தை மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்குகின்றது.

فوائد الحديث

ஸூரா பகராவின் இறுதிப் பகுதியின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.

ஸூரா பகராவின் இறுதிப் பகுதியை இரவில் ஓதயவரை கெடுதி, தீங்கு, ஷைத்தானை விட்டும் அது பாதுகாக்கின்றது.

التصنيفات

அத்தியாயங்கள் மற்றும் வசனங்களின் சிறப்பு, அத்தியாயங்கள் மற்றும் வசனங்களின் சிறப்பு, காலை மாலை திக்ருகள், காலை மாலை திக்ருகள்