ஒரு முஸ்லிமுக்கு அவனைத் தைத்து விட்ட ஒரு முல்லு உட்பட, அவனுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம்,வேதனைகளை…

ஒரு முஸ்லிமுக்கு அவனைத் தைத்து விட்ட ஒரு முல்லு உட்பட, அவனுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம்,வேதனைகளை அல்லாஹ் அவனின் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக ஆக்காமல் இருக்கமாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள் : "ஒரு முஸ்லிமுக்கு அவனைத் தைத்து விட்ட ஒரு முல்லு உட்பட, அவனுக்கு ஏற்படும் சிரமம், நோய், கவலை, துக்கம்,வேதனைகளை அல்லாஹ் அவனின் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக ஆக்காமல் இருக்கமாட்டான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஹதீஸ் விளக்கம்:ஒரு முஸ்லிம் அடியான் நோய் துக்கம்,துயரம்,தொல்லை,நெருக்கடி,பயம் அச்சம் போன்ற எந்தவொரு சிரமத்தினாலேனும் தீண்டப்படுவானாகில் அது அவனின் பாவ காரியத்திற்குரிய பிராயச்சித்தமாக அல்லது அதனை அழித்து விடும் ஒன்றாக ஆகி விடாமல் இருப்பதில்லை.இதனையும் தாண்டி இச்சந்தர்ப்பத்தில் மனிதன் பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நற் கூலியை எதிர்பார்ப்பானாகில் அவனுக்கு அதன் கூலியும் கிடைக்கும். இதன்படி துன்பங்கள் இரு வகைப்படும், அதாவது சில வேலை மனிதனைத் துன்பம் துயரங்கள் தீண்டி விடும் போது அவன் தனக்குண்டான துயரத்திற்காக அல்லாஹ்விடம் நற் கூலியை எதிர்பார்ப்பானாகில் அதனால் அவனுக்கு இரண்டு பயன்கள் கிடைக்கும். அவவையாவன: பாவ காரியங்களுக்கான பிராயச்சித்தமும்,அபரிமிதமான நற் கூலிகளுமாகும். மேலும் சில வேளை மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படும் போது அவனின் மனம் நெருக்கடிக்குள்ளாகி விடுவதன் காரணமாக அவனுக்குக் கவலை ஏற்பட்டு விடுகின்றன.அப்போதவன் அல்லாஹ்விடம் நற் கூலியை எதிர்பார்ப்தையிட்டு மறந்து விடலாம்.அப்பொழுது அது அவனின் பாவ காரியத்திற்குரிய பிராயச்சித்தமாக மாத்திரம் அமையும்.எவ்வாறாயினும் துயரங்கள் அவனுக்கு இலாபகரமானதாகவே அமைகின்றன.எனவே மனிதனுக்குத் துயரம் ஏற்பட்ட போது அவன் பொறுமை காத்து அதற்காக அல்லாஹ்விடம் நற் கூலியை எதிர்பார்க்க மறந்து விட்ட போதிலும் அதனால் அவனுக்கு நற் கூலி கிடைக்காவிட்டலும், அது அவனின் பாவ காரியத்திற்கான பிராயச்சித்தத்தை ஈட்டித் தரும். அல்லது முன்னர் குறிப்பிட்டது போன்று பாவத்திற்கான பிராயச்சித்தம் மற்றும் நற்கூலி ஆகிய இரண்டு இலாபத்தையும் அவனுக்கு ஈட்டித் தரும். ஆகையால் மனிதனை ஒரு முல்லு தைத்து விட்டாலும் அதன் மூலம் அவன் தனது பாவத்திற்குப் பிராயச்சித்தத்தை ஈட்டிக் கொள்ளும் அதே சமயம், அதன் மூலம் நன்மையை ஈட்டிக் கொள்வதாயின், அதற்காக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்ப்பதும் அவசியமாகும். இவ்வாறு துயரங்கள் மூலம் மனிதனை அல்லாஹ் சோதனை செய்து விட்டு அதற்காக அவனுக்கு நற் கூலியை அல்லது அவனின் பாவத்திற்குப் பிரயச்சித்தத்தை வழங்குவாதனது அல்லாஹ்வின் அருற்கொடையினதும், அவனின் தயாளத்தினதும் வௌிப்பாடாகும். எனினும் பாவ பிராயச்சித்தம் என்பது சிறு பாவங்களுடன் சம்ந்தப்பட்டதாகும். பெரும் பாவங்களைபை் பொறுத்த மட்டில்,அதற்காகப் பாவ மன்னிப்புக் கோராமல் அது நீங்கி விடாது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

فوائد الحديث

ஒரு விசுவாசிக்கு ஏற்படும் நோய், மற்றும் இதர சோதனைகள் அவை குறைவாக இருந்தாலும் அவனை பாவங்கள், தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துகின்றது.

இதில் முஸ்லிம்களுக்கு பாரியதொரு நற்செய்தி உள்ளது, ஏனெனில் இது போன்ற சோதனைகளால் சோதிக்கப்படாது எந்த முஸ்லிமும் இல்லை.

இந்த சோதனைகளால் தரங்கள் உயர்த்தப்பட்டு, நன்மைகளும் அதிகமாகின்றன.

இது கூறப்பட்டுள்ள பாவமன்னிப்பு சிறிய பாவங்களுக்கு மாத்திரமே, பெரிய பாவங்களுக்காக தவ்பாச் செய்வது கட்டாயமாகும்.

التصنيفات

ஏகத்துவத்தின் மகிமைகள்