அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான்.

அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆவியா (ரலி) கூறுகின்றார்கள் :"அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

அல்லாஹ் யாருக்கு நலவு நாடி, பயனளிக்க விரும்புகின்றானோ அவரை மார்க்க சட்டத்தில் தீர்க்கமான அறிவுள்ள ஓர் மேதையாக ஆக்குகின்றான். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள "பிக்ஹ்" எனும் வார்த்தைக்கு இரு பிரயோகங்கள் உள்ளன. 1. செயல் ரீதியான மார்க்க சட்டங்களை அவற்றின் விரிவான ஆதாரங்களுடன் அறிதல். 2. பொதுவாக அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிதல். அப்போது அது அடிப்படை நம்பிக்கை, இஸ்லாமிய சட்டதிட்டங்கள், ஹராம், ஹலாலை அறிதல், பண்பாடுகள், நற்பண்புகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது.

فوائد الحديث

மார்க்க விளக்கத்தைக் கற்பதை இந்நபிமொழி ஊக்குவிப்பதுடன், அதன் சிறப்பிற்கு இது ஆதாரமாக உள்ளது.

"பிக்ஹ்" எனும் வார்த்தைக்கு இரு பிரயோகங்கள் உள்ளன: 1. விரிவான மார்க்க சட்டங்களை அவற்றின் விரிவான ஆதாரங்களுடன் அறிதல். 2. அடிப்படை நம்பிக்கை, இஸ்லாமிய சட்டதிட்டங்கள், ஹராம், ஹலால், பண்பாடுகள், நற்பண்புகள் போன்ற பொதுவான மார்க்க விடயங்களை அறிதல்.

மார்க்க சட்டங்களைக் கற்காமல் புறக்கணிப்பவருக்கு அல்லாஹ் நலவு நாடவில்லை என்பதும் இந்நபிமொழியில் இருந்து பெறப்படும் பயனாகும்.

கல்வி கற்பதில் ஆர்வங் கொள்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான். ஏனெனில் அல்லாஹ் அறிவு, மார்க்க விளக்கத்தைக் கற்க வாய்ப்பளித்ததன் மூலம் அவனுக்கு அல்லாஹ் நலவு நாடியிருக்கின்றான் என்பதைப் புரியலாம்.

மார்க்கக் கல்வி பாராட்டத்தக்கது, பிற கல்விகள் அடிப்படையில் பாராட்டப்படவோ, விமர்சிக்கப்படவோ மாட்டாது, இருப்பினும் அக்கல்வி நல்ல விடயத்திற்கான வழியாக இருந்தால் பாராட்டப்படும், தீயதிற்கான வழியாக இருந்தால் விமர்சிக்கப்படும்.

التصنيفات

அறிவின் மகிமை, அறிவின் மகிமை