'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ…

'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்), 'அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), 'லாஇலாஹ இல்லல்லாஹு' (உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை), 'அல்லாஹ் அக்பர்' (அல்லாஹ் மிகப்பெரியவன்) ஆகிய நான்கு வாசகங்களும் அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்கு உரியவைகளாகும். இதில் எதனைக் கொண்டு நீங்கள் துவங்கினாலும் அதனால் உங்களுக்குப் எதுவித குற்றமுல்லை'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தைகள் நான்கு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். அவை பின்வருமாறு : முதலாவது : ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்) என்பது அல்லாஹ் அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூயவன் என்பதைக் குறிக்கும் இரண்டாவது : அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசிக்கவும், போற்றப்படவும் தகுதிவாய்ந்த பரிபூரணமான அல்லாஹ்வின் பண்பை இது குறிக்கிறது. மூன்றாவது : லாஇலாஹ இல்லல்லாஹ் : அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது இதன் கருத்தாகும். நான்காவது: அல்லாஹு அக்பர் அதாவது (அல்லாஹ் மிகப்பெரியவன்) எல்லாவற்றையும் விடவும் கண்ணியமும் உயர்வும் தனித்துவமுமிக்கவன் என்பது இதன் கருத்தாகும். இந்த வார்த்தைகளின் சிறப்பிற்காககவும், அதன் நன்மைகளையும் அடையும் பொருட்டும் அவற்றை வரிசையாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

فوائد الحديث

இந்த வார்த்தைகளில் எதனைக் கொண்டு ஆரம்பித்தாலும் அதில் குற்றமேதுமில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த மார்க்கத்தின் இலகு தன்மை தெளிவுபடுத்தப்பட்டிருத்தல்.

التصنيفات

பொதுவான திக்ருகள்