நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க…

நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்

அப்துர் ரஹ்மான் இப்னு அபீலைலா அவர்கள்அறிவிக்கிறார்கள்: ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாம் இருந்தோம். அப்பொழுது அவர்கள் பருகுவதற்கு தண்ணீ|ர் கேட்டார்கள். நெருப்பு வணங்கி ஒருவன் தண்ணீர் கொண்டு வந்து கோப்பையை அவர்களின் கையில் வைக்க உடனே அக்கோப்பையை தண்ணீருடன் எறிந்து விட்டுக் கூறினார்கள், பல விடுத்தங்கள் அவனைத் தடுத்தும் இதனைச் செய்கிறானே என அங்கலாய்த்தவர்களாக இது நான் செய்யவில்லை என்றாலும் நபி ஸல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை நான் செவி மடுத்தேன்: "நீங்கள் சாதாரண பட்டையோ அலங்காரப்பட்டையோ அணிய வேண்டாம். தங்கப் பாத்திரத்திலோ வெள்ளிப் பாத்திரத்திலோ குடிக்க வேண்டாம். அவ்விரண்டின் தட்டுகளில்; நீங்கள் சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவை இவ்வுலகில் அவர்களுக்குரியதும், மறுமையில் எங்களுக்குரியதுமாகும்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லாவகையான பட்டு அணிவதை விட்டும் ஆண்களை தடை செய்தார்கள். தங்கப் பாத்திரத்திலோ, வெள்ளிப் பாத்திரத்திலோ தங்கம் வெள்ளி பைகளிலோ சாப்பிடுவதை குடிப்பதை விட்டும் ஆண்களையும் பெண்களையும் தடை செய்தார்கள். மறுமை நாளில் அவை முஃமின்களுக்கே பிரத்தியேகமானது என நபியவர்கள் கூறினார்கள்; ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு இவ்வுலகில் அவற்றைப் பயன்படுத்துவதை விட்டும் தவிர்ந்து கொண்டனர். ஆனால் நிராகரிப்பாளர்களாகிய கபிர்களுக்கு மறுமையில் அவை கிடையாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி அவர்களின் இவ்வுலக வாழ்விலே தடை செய்யப்பட்டவைகளை பயன்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தனர்.

فوائد الحديث

சாதாரணபட்டும் அலங்காரப்பட்டும் அணிவது ஆண்களுக்கு ஹராமாகும். மேலும் அதை அணிந்தவனுக்கு கடும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சாதாரண பட்டு மற்றும் அலங்காரப்பட்டு அணிவது பெண்களுக்கு அனுமதிக்கப்படும்.

தங்கம் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடுதல், மற்றும் அப்பாத்திரங்களில் குடித்தல் ஆண் பெண் இரு பாலர் மீதும் ஹராமாக்கப்பட்டுள்ளது.

ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு தடுக்கிற விடயத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதற்குரிய காரணம்: அவர்கள் பல விடுத்தம் - தம்பணியாளனாகிய அந்த மஜூஸிக்கு- தங்கம் வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தடுத்திருந்தும் இதுவரை அவன் தவிர்ந்து கொள்ளவில்லை என்பதினாலாகும்.

التصنيفات

ஆடை ஒழுக்கங்கள்