கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்.

கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் :"கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்".

[ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்]

الشرح

ஹதீஸ் விளக்கம் : தனது வீட்டிலிருந்தோ, நாட்டிலிருந்தோ மார்க்கக் கல்வியைத் தேடி வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வெளியேறிச் சென்றவரைப் போலாவார். ஏனெனில் இவர் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதிலும், ஷைத்தானை இழிவாக்குவதிலும், தன்னை வருத்திக் கொள்வதிலும் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.

فوائد الحديث

கல்வியைத் தேடுவது இறைபாதையில் போரிடுவதற்குச் சமனாகும்.

போர்க்களத்தில் அறப்போர் புரிபவருக்குக் கிடைக்கும் கூலி கல்வியைத் தேடுபவருக்கும் கிடைக்கின்றது. ஏனெனில் இருவருமே அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பலப்படுத்தி, அதிலில்லாதவற்றைத் தடுக்கும் முயற்சியிலேயே ஈடுபடுகின்றனர்.

கல்வியைத் தேடி வெளியேறிச் சென்றவருக்கு வீடு திரும்பும் வரை சென்று, திரும்புதல் இரண்டிற்குமான கூலி வழங்கப்படுகின்றது.

التصنيفات

அறிவின் மகிமை