இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான்…

இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பக்ரா (ரலி) கூறுகின்றார்கள் : "இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்''. அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர் (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ''அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்'' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இரண்டு முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரைக் கொல்லும் நோக்கில் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் கொன்றவர் தான் நேரடியாகக் கொலை செய்ததாலும், கொல்லப்பட்டவர் அடுத்தவரைக் கொல்லும் எண்ணத்தில் இருந்ததாலும் அல்லாஹ் மன்னிக்காவிட்டாலோ, மார்க்க உரிமைக்காக வேண்டிய போராக இல்லாவிட்டாலோ இருவரும் நரகில் நுழைவார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்".

فوائد الحديث

ஒரு பாவத்தை செய்ய உறுதி பூண்டு, செயலில் இறங்கி, அதற்குரிய காரணங்களை நேரடியாக மேற்கொண்டவருக்கு அப்பாவம் நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் அல்லாஹ் மன்னிக்காவிட்டால் தண்டனை உண்டு. இருப்பினும் உள்ளத்தால் பாவம் செய்ய எத்தனித்து, அதன் காரணிகளை மேற்கொள்ளாவிட்டால் பாவியாக மாட்டார்.

முஸ்லிம்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதை இந்நபிமொழி எச்சரிக்கின்றது.

التصنيفات

உளச் செயற்பாடுகள், பாவங்களைக் கண்டித்தல்