எனது ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு…

எனது ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே! வணக்குக்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு.

நபி (ஸல்) அவரகளின் எழுத்தாளர்களில் ஒருவரான அபூரிப்ஈ என்ற ஹன்ளலா இப்னு ரபீஉ அல் உஸைதி (ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு தடவை என்னை அபூபக்கர் (ரழி) அவர்கள் சந்தித்து "ஹன்ளலா எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு "ஹன்ளலா முனாபிக் ஆகிவிட்டான் என்று நான் கூறினேன். "ஸுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறீர்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நபி (ஸல்) அவர்களிடம் நாம் இருக்கும் போது சொர்கத்தையும், நரகத்தையும் நாம் நேரில் பார்ப்பது போலவே நினைவு கூர்கிறோம். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நாம் வெளியேறிவந்துவிட்டால் மனைவியரை,குழந்தைகளை கவனிப்பதிலும் வாழ்க்கைத் தேவைகளுக்காக உழைப்பதிலும் மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமானதை மறந்து விடுகிறோம்." என்று கூறினேன்."அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக இது போன்றே நானும் உணர்கிறேன்" என்று அபூபக்கர் (ரழி) கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். "இறை தூதர் அவர்களே!ஹன்ளலா நயவஞ்சகன் ஆகிவிட்டார்." என்று கூறினேன். "என்ன கூறுகிறீர்?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "இறைதூதர் அவர்களே! உங்களுடன் இருக்கும் போது கண்ணால் பார்ப்பது போல் சொர்க்கத்தையும்,நரகத்தையும் நினைவு கூர்கிறோம். உங்களை விட்டும் நாங்கள் வெளியேறி விட்டால் மனைவியர், குழந்தைகள், வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்துவிடுகிறோம்." என்று கூறினேன். "எனது ஆத்மாவை தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலேயே இறைவனை நினைவு கூர்வதிலேயே தொடரந்தும் இருந்தால் உங்கள் படுக்கையிலும் உங்கள் வழிகளிலேயும் வானவர்கள் கைகொடுத்து மகிழ்வார்கள்.எனினும் ஹன்ளலாவே வணக்த்திற்கு என ஒரு நேரம் உண்டு, வாழ்க்கைக்கு உழைப்பதற்கு என்று ஒரு நேரம் உண்டு." என்று மூன்று முறை கூறினார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

அபூபக்கர் (ரழி) அவர்களிடம் ஹன்ளலா (ரழி) அவர்கள், தான் நபியவர்களிடம் சபையில் இருக்கும் நிலைக்கு மாற்றமாக தான் இருப்பதாக கூறினார்கள். அதாவது நபியவர்களிடத்தில் இருக்கும் வேளையில் அல்லாஹ்வை நினைவு கூர்பவராகவும் தமது பிள்ளைகள், பெண்கள் (மனைவிமார்களுடன்) உலக விவகாரகங்களிலும் கலந்து விடும்போது நிலை மாறிவிடுகிறது. எனவே இவ்வாறான நிலை மாற்றம் நயவஞ்கமாகும் என நினைத்தார்கள். உண்மையில் நயவஞ்சகம் என்பது உண்மை நிலையிலிருந்து வெளிப்படையில் வேறு ஒரு நிலையை பிரதிபலிப்பதாகும். இவ்விஷயத்தை நபி ஸல் அவர்களிடம் கூறிய போது "என்னுடன் இருக்கும் நிலையில் நீங்கள் எப்போதும் இருந்தால் உங்களுடன் எல்லா நிலைகளிலும் மலக்குமார்கள் கைலாகு செய்வார்கள். என்றாலும் இவ்விடயத்தில் நடு நிலையை கடைபிடிப்பது அவசியம். அதாவது அல்லாஹ்வுக்கென்று ஒரு சில நேரங்களை ஒதுக்குவதும், தனது குடும்பத்திற்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் இன்னும் சில நேரங்களை ஒதுக்குவதும் அவசியமாகும்." என்று கூறினார்கள்.

التصنيفات

திக்ரின் சிறப்புகள்