ஒரு பயணி ஒரு ஷைத்தான்,இரண்டு பயணிகள் இரண்டு ஷாத்தான்கள்,மூன்று பயணிகளே பிரயாணிகள்.

ஒரு பயணி ஒரு ஷைத்தான்,இரண்டு பயணிகள் இரண்டு ஷாத்தான்கள்,மூன்று பயணிகளே பிரயாணிகள்.

ஒரு பயணி ஒரு ஷைத்தான்,இரண்டு பயணிகள் இரண்டு ஷாத்தான்கள்,மூன்று பயணிகளே பிரயாணிகள்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஹஸனானது-சிறந்தது] [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார் - இதனை மாலிக் பதிவு செய்துள்ளார்]

الشرح

தனிப் பயணம் வெறுப்பைத் தரும்.இருவர் சேர்ந்த பயணமும் அப்படியே.குறிப்பாக மனித நடமாட்டமில்லாத இடங்களில் இதனை அதிகம் உணரலாம்.எனினும் பயணத்தின் போது கூட்டம் அதிகம் இருக்கும் போது அது விருப்பமாகவும்,சாவகாசமாகவும் இருக்கும்.எனவே ஒருவன் தனியாகப் பயணம் செய்யும் போது அவனுக்குத் தேவையேதும் ஏற்படும் போது அவனுக்கு உதவ எவரும் கிடைக்கும் வரையில் பயணம் அவனுக்கு வெறுப்பைத் தரும் என்பது தெளிவு.அல்லது அவனுக்கு மரணம் சம்பவிக்கின்ற போதும்,ஷைத்தானின் சூழ்ச்சி எதிலும் அவன் சிக்கி விடாமல் இருக்கும் பொருட்டும் அவனுக்குப் பயணத் தோழன் ஒருவன் தேவை என்பதும் தெளிவு மேலும் இருவர் சேர்ந்து பிரயாணம் செய்கின்ற போதும் சில வேளை ஒருவனுக்கு ஏதேனும் விபத்து நிகழ்ந்து விட்டாலோ மற்றவன் தனிமைப்பட்டு விடுவான்.ஆனால் பயணிகளுக்கு வசதியாக அதிவேகப் பாதைகளில் மோட்டார் வண்டிகள் போன்ற வாகணங்களில் பயணம் நடைபெற்று வரும் இந்த யுகத்தில் பயணம் தனிப் பயணமாகக் கருதப்பட மாட்டாது.மேலும் தனியாகப் பயணம் செய்யும் ஒருவன் ஒரு ஷைத்தானெனக் கருதப்படவும் மாட்டான்.ஏனெனில் பாதையில் பயணம் செய்யும் எல்லா பயணிகளும் சேர்ந்து பயணிகள் கூட்டம் போன்று ஆகிவிடுகின்றனர்.இதற்கு உதாரணமாக மக்கா,ரியாதுக்கிடையிலான பிரயணங்களைக் குறிப்பிடலாம்.எனினும் மனிதர்கள் இல்லாத சஞ்சாரமற்ற பாதைகளில் தனியாகப் பயணம் செய்வோர் இந்த ஹதீஸில் அடங்குவர்.

التصنيفات

பிரயாணத்தின் ஒழுங்குகளும் சட்டங்களும்