மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாக…

மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாக கூறுவது,அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நபியவர்கள் சொன்னதாகச் சொல்வது நிச்சயமாக பெரும் பொய்யில் ஒன்றாகும்

மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாகச் சொல்வது,அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நபியவர்கள் சொன்னதாகச் சொல்வது நிச்சயமாக பெரிய பொய்யில் ஒன்றாகும் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என வாஸிலா இப்னுலா அஸ்கஃ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதன் சொல்லும் பொய்யில் மிகக்கொடியது யாதெனில்,அவன் தன் பரம்பரையைத் தனது தந்தையல்லாத வேரொருவனின் பக்கம் சாட்டிவிடுவது.அல்லது வேறு எவரேனும் அவனுடைய தந்தையல்லாதவனை அவனுடைய தந்தை என்று சாட்டினால் அதனை அவன் அங்கீகரித்தலாகும். மேலும் மனிதன் தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாகச் சொல்வதும் அவ்வாறே ரஸூல் (ஸல்) சொல்லாத,செய்யாத, அனுமதிக்காத எதனையும் அவர்களின் பக்கம் சாட்டி விடுவதும் அல்லாஹ்விடம் பெரும் பொய்யாகக் கருதப்படும்.

التصنيفات

சுன்னாவின் முக்கியத்துவமும் மதிப்பும், தீய குணங்கள், கனவின் ஒழுங்குகள்