நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் பாலின் பங்கை எடுத்து.வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள்…

நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் பாலின் பங்கை எடுத்து.வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள் அப்போது தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி விடாதபடி விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும்படியாக அவர்கள் ஸலாம் சொல்வார்கள்.

நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களது பாலின் பங்கை எடுத்து வைப்போம். இரவு வேளையில் நபியவர்கள் வருவார்கள் அப்போது தூங்கிக் கிடப்பவர்களை எழுப்பி விடாதபடி விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும்படியாக அவர்கள் ஸலாம் சொல்வார்கள்.இவ்வாறு வருகை தந்த ரஸூல் (ஸல்) எப்போதும் ஸலாம் சொல்வது போன்றே ஸலாம் சொன்னார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

மிக்தாத் (ரழி) அவர்களும் அவருடனிருப்பவர்களும் ஆட்டின் பாலைக் கரந்து தங்களின் பங்கை குடித்து விட்டு ரஸூல் (ஸல்) அவர்கள் வரும் வரையில் அவர்களின் பங்கை எடுத்து வைப்பார்கள்.எனவே இரவு வேளையில் நபியவர்கள் அவர்களிடம் வருவார்கள்.அப்பொழுது அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பர்.அச்சமயம் அதிகம் சப்தமில்லாமல் நடுத்தரத் தொணியில் நித்திரையில் இருப்பவர்களை எழுப்பி விடாதபடி, விழித்திருக்கும் ஏனையவர்களுக்குக் கேட்கும் வண்ணம் அவர்களுக்கு நபியவர்கள் ஸலாம் சொல்வார்கள்.

التصنيفات

ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்