இறைவா! என் சமுதாயத்தில் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன்…

இறைவா! என் சமுதாயத்தில் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயாக! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.

நபியவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹூ அன்ஹா அறிவிக்கிறார்கள். இறைவா! என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அவருடன் நீ கடுமையாக நடப்பாயக!என் சமுதாயத்தின் காரியங்களில் ஒன்றைப் பொறுப்பேற்ற ஒருவர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொண்டால் அவருடன் நீ மென்மையாக நடப்பாயாக.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இந்த ஹதீஸில் பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் மக்கள் விவகாரங்களை பொறுப்பேற்றவர், மக்களுடன் கடுமையாக நடந்து கொண்டால் அல்லாஹ்வும் அவருடன் அதே போல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நீதி, நேர்மை,கருணை,மென்மை போன்ற பண்புகளுடன் நடந்து கொள்பருக்கு நற்கூலி வழங்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறார்கள். ஆகையால் செயலின் தன்மைக்கு ஏற்பவே கூலியும் கிடைககிறது.

التصنيفات

நாட்டுத் தலைவரின் கடமைகள்